ஒட்டுமொத்த ஆந்திராவும் மாறப்போகுது.. சுந்தர் பிச்சையின் சிறுவயது கனவு.. AI-ல் மாறும் இந்தியா!

Published : Oct 20, 2025, 07:33 AM IST
sundar pichai

சுருக்கம்

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டரை அமைக்க $15 பில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் பெனியோஃப் உடனான உரையாடலில் சுந்தர் பிச்சை மனம் திறந்து பேசியுள்ளார்.

சுந்தர் பிச்சை பேட்டி

அப்போது, “நான் சிறுவயதில் தென்னிந்தியாவை கடந்து செல்லும் ரயில் பயணத்தில் ‘விசாகப்பட்டினம்’ என்ற ஒரு அழகான கடற்கரை நகரத்தை கடந்து செல்வேன். எப்போதும் ஒரு சிறப்பு.” என்று அவர் நினைவுபடுத்தினார். சமீபத்தில் கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு $15 பில்லியன் (அறுபதாயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்வதாக அறிவித்தது.

கூகுளின் மிகப்பெரிய AI முதலீடு

இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில் உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா சென்டரை அமைக்கவுள்ளது. இது அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய AI ஆகும் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

1-GW திறன் கொண்ட டேட்டா சென்டர்

இதுகுறித்து பேசிய சுந்தர் பிச்சை, “இந்த $15 பில்லியன் திட்டம் 1 ஜிகாவாட் திறன் கொண்ட, 80% சுத்த ஆற்றலால் இயங்கும் AI டேட்டா சென்டரை உருவாக்கும். இது அந்த பிராந்தியத்தை முழுமையாக மாற்றும் திறன் கொண்டது,” என்றார்.

மோடியுடன் பகிர்ந்த பெருமை

இந்த திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக அழைத்து பெருமை அளித்ததாக சுந்தர் பிச்சை கூறினார். “நாட்டை வளர்க்க அக்கறை கொண்ட பிரதமருடன் இதுபோன்ற திட்டத்தை பகிர்வது எனக்கு பெருமை” என அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தின் சக்தியில் நம்பிக்கை

“எனது வாழ்க்கையை மாற்றிய தொழில்நுட்பம் போலவே, AI மூலமாக நாம் இன்னும் பெரிய மாற்றத்தை செய்கிறோம் முடியும்,” சுந்தர் என்று பிச்சை கூறினார். தென்னிந்தியாவில் தனது வளர்ப்பு சூழல் தான் குடும்ப மதிப்புகள் மற்றும் அறிவைப் பற்றியது ஆர்வத்தை உருவாக்கியது என பிச்சை கூறினார்.

சிறுவயது அனுபவங்கள்

“அந்த காலத்தில் தொழில்நுட்பத்துக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு ரோட்டரி போன் வாங்கவே ஐந்து ஆண்டுகள் காத்திருந்தேன்,” என அவர் நினைவு கூர்ந்தார். அந்த அனுபவங்களே இன்று தொழில்நுட்பத்தின் சக்தியை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவியதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?