ஆன்ட்ராய்டில் ஜெமினி ஆப் மூலம் இந்த வசதிகளை பயன்படுத்தலாம். அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலமும் ஜெமினி வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
கூகுள் நிறுவனம் தனது பார்ட் சாட்போட்டை ஜெமினி என்று பெயர் மாற்றம் செய்வதாகவும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஜெமினி அல்ட்ரா 1.0 வெர்ஷனை கூகுக்ள வெளியிட இருக்கிறது. இது கூகுள் நிறுவனத்தின் மாடல்களில் மிகவும் திறமையானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று முதல், ஜெமினி ஆங்கிலத்தில் 150 நாடுகளில் கிடைக்கும். ஜெமினி அட்வான்ஸ்டு வசதிகள் கூகுள் ஒன் (Google One) AI பிரீமியம் திட்டத்தின் ஒரு பகுதியாக மாதத்திற்கு 19.99 டாலர் கட்டணத்தில் கிடைக்கும். இதில் இரண்டு மாத இலவச பயன்பாடுக்கான Trail அம்சமும் உள்ளது.
சாட்பாட் 40 மொழிகளில் கிடைக்கிறது என்று கூகுள் கூறுகிறது. கூடுதல் வசதிகள் கொண்ட 'ஜெமினி அட்வான்ஸ்டு' பல்வேறு திறன்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை எக்கச்செக்கமாகக் குறைத்த சாம்சங்!
அல்ட்ரா 1.0 அப்டேட்டுடன் வந்துள்ள ஜெமினி அட்வான்ஸ்டு வெர்ஷன் முன்னணியில் உள்ள சாட்பாட்களைவிட மேம்பட்டதாக இருக்கும் என்றும் கூகுள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயனர்கள் நீண்ட, விரிவான உரையாடல்களை நடத்துவதற்கு ஏற்பவும் முந்தைய உரையாடல்களில் இருந்து புரிந்துகொண்டு மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறது.
மொபைல் போனிலியே ஜெமினியைப் பயன்படுத்துவதன் மூலம் எந்த இடத்திலும் AI உதவியைப் பெறலாம். டைப் செய்தும், பேசியும், படத்தை அப்லோட் செய்து தேவையான பதிலைப் பெறமுடியும் என்று கூகுள் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடத்தின் படத்தை அப்டலோட் செய்து அது தொடர்பான தகவலைக் கேட்கலாம் அல்லது தேவைக்கு ஏற்ப படங்களை உருவாக்கக் கோரலாம் என்று கூகுள் விளக்கியுள்ளது.
ஆன்ட்ராய்டில் ஜெமினி ஆப் மூலம் இந்த வசதிகளை பயன்படுத்தலாம். அல்லது கூகுள் அசிஸ்டண்ட் மூலமும் ஜெமினி வசதிகளைப் பயன்படுத்த முடியும். சில ஃபோன்களில் பவர் பட்டனை அழுத்துவது அல்லது கார்னர் ஸ்வைப் செய்வது போன்ற ஆக்ஷன்கள் மூலம் கூகுள் ஜெமினியை பயன்படுத்தலாம்.
“பல ஆண்டுகளாக, கூகுள் தேடலையும் எங்களின் அனைத்து தயாரிப்புகளையும் மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் Cloud மற்றும் Workspace ஆகியவற்றுக்கும் AI தொழில்நுட்பமே மையமாக உள்ளது. எங்கள் பிரபலமான சந்தா சேவையான Google One, இப்போது 100 மில்லியன் சந்தாதாரர்களைக் கடக்க உள்ளது” என்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
ரீலீசுக்கு ரெடியான ரெட்மீ இயர்பட்ஸ் 5! AI வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் பக்காவான ஆடியோவுக்கு கேரண்டி!