Quick Switch மற்றும் Intelligent Content Suggestions அம்சங்களால் சாம்சங்கின் வேற லெவல் பிரைவசி பாதுகாப்பு..!

By karthikeyan VFirst Published Oct 15, 2020, 3:05 PM IST
Highlights

Quick Switch மற்றும் Intelligent Content Suggestions ஆகிய 2 வசதிகளும் Galaxy A51 மற்றும் Galaxy A71 ஸ்மார்ட்ஃபோன்களின் வேற லெவல் பிரைவசி பாதுகாப்பை வழங்குகின்றன.
 

நீங்கள் ஒரு பார்ட்டியில் இருக்கிறீர்கள்; அப்போது உங்கள் மொபைலில் புகைப்படம் எடுக்கலாம் என்று யாராவது உங்கள் மொபைலை கேட்டு நீங்கள் கொடுத்தால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் பிரைவசி குறித்த கவலை உங்களுக்கு வரலாம்.

வாட்ஸ் ஆப்பில் நீங்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் ஒரு மெசேஜ், வேறொரு நபரின் கையில் உங்கள் ஃபோன் இருக்கும்போது வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றம் உங்கள் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கும். சாம்சங் Galaxy A51 மற்றும் Galaxy A71 பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் இதுபோன்று பிரைவசி குறித்து கவலைப்பட தேவையில்லை. நீங்கள் குயிக் ஸ்விட்ச் ஆப்சனை பயன்படுத்தி பிரைவசியை பாதுகாத்துக்கொள்ளலாம்.

குயிக் ஸ்விட்ச் ஆப்சனில் பவர் பட்டனை டபுள் கிள்க் செய்து பிரைவேட் மோடிலிருந்து உடனடியாக பப்ளிக் மோடிற்கு மாற்றிவிடலாம். அதன்மூலம் உங்களது கேலரி, ப்ரௌசர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் பிரைவசியை பாதுகாக்க முடியும். கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அபாரமான, வியக்கத்தகு அம்சம் இது.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.. இந்த வீடியோவில் ராதிகா மதனும் அவரது காதலராக சன்னி சிங்கும் நடித்திருக்கிறார்கள். ராதிகா மதன் காதலர் சன்னி சிங்கின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்க நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவரது மொபைலை சன்னி சிங் பார்க்கிறார். அப்போது ராதிகா மதன், குயிக் ஸ்விட்ச்சை பயன்படுத்துகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்க. 

 

குயிக் ஸ்விட்ச்சை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பாருங்க.

 


Intelligent Content Suggestionsல் இருக்கும் "On Device AI" உங்களது மொபைலில் இருக்கும் ஃபோட்டோக்களை பாதுகாக்கும். எவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அவற்றை டேக் செய்து Secure Folderல் போட்டால் போதும், மற்றதையெல்லாம் AI பார்த்துக்கொள்ளும்.

இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்த விளக்க வீடியோவை பாருங்க..

 

எனவே நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை உங்கள் உடன்பிறந்தவர்கள் அல்லது உறவினர்கள் என யாரிடம் வேண்டுமானால் கொடுக்கலாம். அவர்களால் உங்கள் மொபைலில் உங்களது பிரைவசி விஷயங்கள் பாதுகாக்கப்படும்.

Alt Z Life மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். எந்தவிதமான சூழலிலும் உங்களது மொபைல் பிரைவசியை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Galaxy A51 மற்றும் Galaxy A71 பேக்கேஜ் டீல்ஸ்:

Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய 2 மொபைல்களும் உண்மையான ஆல்ரவுண்டர்கள். ஏன் என்று ஊகியுங்க பார்ப்போம். துளை பன்ச்சுடன் கூடிய மெல்லிய ரேசர் கொண்ட சாய்பக்கம். அருமையான டிஸ்ப்ளே, சிறந்த செல்ஃபி கேமரா, நீண்டு நிலைக்கும் பேட்டரி, குவாட் கேமரா செட்டப் ஆகியவை உள்ளன. இதைவிட வேறு என்ன வேண்டும்..?

Galaxy A71 மொபைல், 6.7 இன்ச் சூப்பர் AMOLED Plus displayவை பெற்றிருக்கிறது. Galaxy A51 6.5 இன்ச் சூப்பர் AMOLED full-HD+ display.

இந்த மொபைல்களின் குவாட் கேமரா செட்டப் மிகச்சிறந்தது.

Galaxy A71 மொபைலில் 64 MP(மெகா பிக்ஸெல்) லென்ஸ், 12 MP அல்ட்ரா வைட் லென்ஸ் 123 டிகிரி ஃபீல்டு வியூ, 5 MP டெப்த் சென்சார் மற்றும் 5 MP மேக்ரோ கேமரா. க்ளோஸ் அப் ஷாட், எந்த கோணத்திலான ஷாட், அல்ட்ரா வைட் ஷாட் என எந்தவிதமான ஃபோட்டோக்களையும் உயர்தரத்துடன் எடுக்க முடியும்.

Galaxy A51 மொபைலில் 48 MP பிரைமரி சென்சார், 12 MP அல்ட்ரா வைட் லென்ஸ், 5 MP டெப்த் சென்சார், 5 MP மேக்ரோ லென்ஸ். செல்ஃபி கேமரா இரண்டுமே தலா 32 MP. குவாட் கேமரா செட்டப் இருப்பதால், உங்களது இன்ஸ்டாகிராம் பதிவு வேற லெவலில் இருக்கும்.

Galaxy A51 & A71 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களின் சாஃப்ட்வேர் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட பிறகு, Single Take, Night Hyperlapse, Custom Filters, Switch Camera While Recording*, Quick Video, Smart Selfie & AI Gallery Zoom.

Alt Z Life

Galaxy A71 மற்றும் A51 ஸ்மார்ட்ஃபோன்கள் புதுமையான சிறப்பம்சங்களுடன், கண்கவர் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் Quick Switch மற்றும் Intelligent Content Suggestions ஆகியவை பிரைவசியை உறுதி செய்கின்றன. இதைவிட அருமையான ஸ்மார்ட்ஃபோன்கள் கிடைக்காது. வாங்குவதற்கு நீங்க ரெடியா..?
 

click me!