
கூகிள் ஜெமினி AI, குறிப்பாக அதன் Nano Banana கருவி மூலம், இப்போது ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சக்திவாய்ந்த கருவி, நம்ப முடியாத தத்ரூபத்துடன் படங்களை உருவாக்க உதவுகிறது. சமீபத்தில் வைரலான ரெட்ரோ சேலை AI இமேஜஸ் முதல் பலவிதமான பின்னணிகள், வண்ணங்கள் மற்றும் ஸ்டைல்களுடன் தனித்துவமான போர்ட்ரெய்ட்ஸ்களை மக்கள் உருவாக்கிக் குவிகின்றனர். AI-யின் இந்த அதீத துல்லியம், படைப்பாற்றல் சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இல்லை என்பதைக் காட்டுகிறது. நீங்கள் பழைய கால (ரெட்ரோ) அழகியலை விரும்பினால், உங்களை நீங்களே போலா ராய்டு ஸ்டைலில் உருவாக்கிக் கொள்ள கீழே உள்ள வழிமுறைகளையும் prompts-களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
போர்ட்ரெய்ட்ஸ்களை உருவாக்க நீங்கள் ப்ராம்ட்களுக்குள் நுழைவதற்கு முன், இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்:
• Gemini-ஐ அணுகவும்: உங்கள் ஸ்மார்ட்போனில் Google Gemini செயலியை நிறுவுங்கள் அல்லது Google AI Studio வலைத்தளத்திற்குச் செல்லவும்.
• கருவியைக் கண்டறியவும்: அரட்டைப் பகுதியில் (Chat Interface) Nano Banana Image உருவாக்கும் விருப்பத்தைத் தேடுங்கள்.
• உங்கள் Prompt-ஐ உள்ளிடுக: நீங்கள் உருவாக்க விரும்பும் படத்தைப் பற்றிய விளக்கமான கட்டளையை (Prompt) உள்ளிடவும்.
• உங்கள் Reference படத்தைப் பதிவேற்றவும்: கட்டளை உள்ளிடும் பகுதிக்கு அருகில் உள்ள '+' ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் போலா ராய்டு போர்ட்ரெய்ட்டாக மாற்ற விரும்பும் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
• உருவாக்கு: 'Run' அல்லது 'Ctrl + Enter' பொத்தானை அழுத்தவும்.
அழகான, விண்டேஜ் ஸ்டைல் போலா ராய்டு போர்ட்ரெய்ட்ஸ்களை உருவாக்க, நீங்கள் விரும்பும் தோற்றம், உணர்வு மற்றும் ரெட்ரோ விவரங்களை விவரிக்கும் வார்த்தைகளை (Keywords) சேர்த்து Prompt-ஐ உருவாக்க வேண்டும். உங்கள் முகம் மாற்றப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என்றால், "The girl image is uploaded as reference image and the face must remain exactly the same as in the provided reference photo, with no alterations" என்ற வரியை இணைப்பது அவசியம்.
ரெட்ரோ ஃபிலிம் லுக், மங்கலான டோன்கள், பேஸ்டல் வண்ணங்கள், கிரீமி வெள்ளை, ஃபிலிம் க்ரெய்ன், தூசி, கீறல்கள் மற்றும் பகல் ஒளி போன்ற பாணியுடன் கூடிய, நீல ஜீன்ஸ் & வெள்ளை டீ-சர்ட், பச்சை உடை, மஞ்சள் பிளவுஸ் & கருப்பு பாவாடை, அல்லது ஊதா ஸ்வெட்டர் போன்ற ஆடை மற்றும் நிறத் தேர்வுகளில், கேண்டிட் வைப், சிந்தனைமிக்க பார்வை, மெல்லிய சிரிப்பு மற்றும் குழப்பமான அலை அலையான முடி ஆகிய தோற்றமும் உணர்வும் கொண்ட ஒரு படத்தை உருவாக்கலாம்.
இந்தக் குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் Prompt-ஐ உருவாக்கி, உங்களுக்கு ஏற்ற தனித்துவமான AI போர்ட்ரெய்ட்டை இப்போதே உருவாக்குங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.