2023 இல் டீப்ஃபேக் படங்கள் 200% அதிகரித்துள்ளன என்று கூறும் கார்ட்னர் PAD செயல்முறையுடன் டீப்ஃபேக் போன்ற போலிகளைக் கண்டறிய IAD என்ற பட ஆய்வு முறையும் தேவைப்படும் என்றும் வலியுறுத்துகிறது.
AI உருவாக்கிய டீப்ஃபேக் படங்கள் காரணமாக, 2026ஆம் ஆண்டுக்குள் முகத்தை பயோமெட்ரிக் அடையாளமாக பயன்படுத்துவதை 30 சதவீத நிறுவனங்கள் நம்பகமானதாக ஏற்காத சூழல் ஏற்படும் என்று என்று கார்ட்னர் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் செயற்கைப் படங்களை உருவாக்க அனுமதிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பாதகமாக பல ஓட்டைகள் உருவாகியுள்ளன எனவும் கார்ட்னர் ஆய்வறிக்கை கூறுகிறது.
உண்மையான நபர்களின் முகங்களை பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் டீப்ஃபேக் என அழைக்கப்படுகின்ன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு டீப்ஃபேக் படங்களை உருவாக்குவது பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் மதிப்பை குறைக்கச் செய்யலாம் என்று கார்ட்னர் நிறுவனத்தின் ஆய்வாளர் அகிஃப் கான் கூறுகிறார்.
விண்வெளியில் ஒரு அற்புதம்! பூமியும் சந்திரனும் அருகருகே இருக்கும் அரிய புகைப்படம்!
"இதன் விளைவாக, அடையாள சரிபார்ப்பு மற்றும் அங்கீகரித்தல் தொடர்பான தேவைகளுக்கு முகத்தை பயமோமெட்ரிக் சான்றாகக் கொள்வதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகலாம். ஏனெனில் சரிபார்க்கப்படும் நபரின் முகம் உண்மையான நபருடையதா அல்லது டீப்ஃபேக் மூலம் உருவாக்கப்பட்டதா என்பதைப் பிரித்து அறிய முடியாது" என அவர் தெரிவிக்கிறார்.
டீப்ஃபேக்குகளின் பெருக்கம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. முகத்தை பயோமெட்ரிக் அடையாளமாகக் கொள்வது, இன்று PAD என்ற செயல்முறைச் சார்ந்தே உள்ளது. PAD செயல்முறை பயோமெட்ரிக் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கு சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இரண்டையும் பயன்படுத்துகிறது. AI மூலம் உருவாக்கக்கூடிய டீப்ஃபேக்குகள் விஷயத்தில் இந்த PAD செயல்முறையை வேலை செய்வதில்லை என்கிறார் அகிஃப் கான்.
2023 இல் டீப்ஃபேக் படங்கள் 200% அதிகரித்துள்ளன என்று கூறும் கார்ட்னர் PAD செயல்முறையுடன் டீப்ஃபேக் போன்ற போலிகளைக் கண்டறிய IAD என்ற பட ஆய்வு முறையும் தேவைப்படும் என்றும் வலியுறுத்துகிறது.
நிறுவனங்கள் ஃபேஸ் பயோமெட்ரிக்ஸுக்கு அப்பால் AI மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக்குகளைத் தவிர்க்க, ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனத்தை கவனமாகத் தேர்வு செய்யவேண்டும். அடையாள சரிபார்ப்பின் தரநிர்ணநம் மேம்பட்டதாக இருக்கிறதா என்று பார்த்து தேர்வுசெய்ய வேண்டும்.
கார்களை கிஃப்ட் செய்த ஐடி நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த ஊழியர்கள்!