
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவப் படைகள் தங்களது ஆயுதங்களையும், செயல்பாடுகளையும் மேம்படுத்த செயற்கை தொழில் நுண்ணறிவை (AI) பெரிதும் நம்ப ஆரம்பித்துள்ளன, பயன்படுத்தியும் வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், ஜூன் மாதம் நடந்த ஈரான்-இஸ்ரேல் போர். இஸ்ரேல் ஈரானை தாக்க AI- மூலம் இயங்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது. ஆகையால், சீனாவின் இப்போது செயற்கை நுண்ணறிவு ஒரு பெரிய அச்சுறுத்தல் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயங்கரவாதிகளுக்கு உலகம் முழுவதையும் அழிக்கக்கூடிய ஆயுதங்களை, அணு ஏவுகணைகளை உருவாக்கும் சக்தியை வழங்கக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட புதிய ஏஐ பாதுகாப்பு நிர்வாக ஆவணத்தில், ஏஐ சரியாக கையாளவிட்டால், அணு, உயிரியல், வேதியியல், ஏவுகணை ஆயுதங்கள் தொடர்பான ஆபத்தான அறிவு சாதாரண மக்களையும், பயங்கரவாத அமைப்புகளையும் சென்றடையக்கூடும் என்று சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவைப் பொறுத்தவரை, ஏஐ-யின் உருவாக்கம், மேம்படுத்தப்பட்ட தலைமுறை நுட்பத்தின் மூலம், அதாவது இணையம், தரவுத்தளங்களில் இருந்து அதிக அளவிலான தகவல்களைப் பிரித்தெடுத்து, அதற்கு பதில்களை உருவாக்குவதன் மூலம், ஆயுதம் தயாரிக்கும் கோட்பாடு, வடிவமைப்பை யார் வேண்டுமானாலும் எளிதாக அணுக முடியும் என்பது அச்சம் எழுந்துள்ளது. இது நடந்தால், தற்போதுள்ள பாதுகாப்பு அமைப்புகள் பயனற்றதாகிவிடும் என்றும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு கடுமையாக அச்சுறுத்தப்படும் என்றும் சீனா கூறுகிறது.
2024 கட்டமைப்பில், இரட்டைப் பயன்பாட்டு ஏஐ தொழில்நுட்பத்தை சீனா ஆபத்தானது என்று கூறுகிறது. அதாவது, வழக்கமான பணிகள், ஆயுதங்கள் இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம். புதிய அம்சம் இன்னும் மேலே சென்று பேரழிவு ஆயுதங்களைக் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. ஆயுதங்களுக்கு அப்பால், கல்வி, புதுமைகளைப் பாதிக்கக்கூடிய வகையில் மக்கள் ஏஐ சாட்போட்களுக்கு அடிமையாகலாம் என்றும் சீனா அச்சுறுத்தலை எடுத்துக் கூறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.