ChatGPT தனது குழந்தைகளைக் கொன்றதாகப் பொய்யாகக் கூறியதை அடுத்து, நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகார் காவல்துறையில் அளித்துள்ளார். ChatGPT தனிப்பட்ட விவரங்களுடன் கட்டுக்கதைகளையும் கலந்து பொய் சொன்னதைக் கண்டு ஹோல்மென் அதிர்ச்சி அடைந்தார்.
நீங்கள் உங்கள் மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டீர்கள் என்று ChatGPT பொய் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் தரவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
நார்வே நாட்டைச் சேர்ந்த ஹோல்மென் என்பவர் 7 மற்றும் 10 வயதுடைய தனது இரண்டு மகன்களையும் கொன்றதாகவும் 2020 டிசம்பரில் ட்ரோன்ட்ஹெய்மில் உள்ள அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் அவர்கள் இறந்து கிடந்தனர் என்றும் சாட்பாட் இட்டுக்கட்டிக் கூறியுள்ளது.
இதைக் கேட்டு ஹோல்மென் அதிர்ச்சியடைந்தார். இந்தக் கொலைகளுக்காக ஹோல்மெனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்றும் சாட்ஜிபிடி கூறியுள்ளது. இது நோர்வேயின் அதிகபட்ச தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோல்மெனின் சார்பாக புகாரை தாக்கல் செய்த டிஜிட்டல் உரிமைகள் குழுவான நோய்ப் (Noyb), சாட்ஜிபிடியின் இந்தப் பதில் ஐரோப்பிய GDPR விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டுகிறது. ChatGPT சாட்பாட்டை உருவாக்கிய OpenAI க்கு எதிராக நோய்ப் அபராதம் கோரியுள்ளது.
"நெருப்பு இல்லாமல் புகை வராது என்று சிலர் நினைக்கிறார்கள் - இதை யாராவது படித்து அது உண்மை என்று நம்பிவிடுவார்களே என்பதுதான் என்னை மிகவும் பயமுறுத்துகிறது," என்று ஹோல்மென் கூறியுள்ளார்.
ChatGPT அளித்த கட்டுக்கதையில் ஹோல்மனைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், அவரது சொந்த ஊர் மற்றும் அவரது குழந்தைகளின் வயது போன்ற துல்லியமான தகவல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.
"தவறான தகவல்களைப் பரப்பும்போது, இறுதியில் இதுவரை சொன்ன அனைத்தும் உண்மை இல்லை என்று சிறிய மறுப்பைச் மட்டும் தெரிவித்துவிட்டுத் தப்ப முடியாது," என்று நொய்ப் குழுவின் வழக்கறிஞர் ஜோகிம் சோடர்பெர்க் கூறுகிறார். இந்தச் சம்வம் ChatGPT தவறுகளைச் செய்யலாம் என்ற எச்சரிக்கையை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புகார் ChatGPT இன் முந்தைய பதிப்பு பற்றியது என்று OpenAI பதிலளித்துள்ளது. "எங்கள் மாதிரிகளின் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் மாயத்தோற்றங்களைக் குறைப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து புதிய வழிகளை ஆராய்ந்து வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் துல்லியத்தை மேம்படுத்தும் வகையில் சாட்ஜிபிடியின் ஆன்லைன் தேடல் திறன்ள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.