Mobile : அதிரடி விலை குறைப்பு.. சாம்சங் & ஒன் பிளஸ் 5ஜி போன்களை மிஸ் பண்ணிடாதீங்க.!!

By Raghupati R  |  First Published Aug 16, 2023, 11:21 AM IST

சாம்சங்கின் 5ஜி போனை ரூ.12,000க்கும், ஒன் பிளஸ் போனை ரூ.15,000க்கும் குறைவாக வாங்குங்கள். அது எப்படி என்று இங்கு காணலாம்.


ஒன் பிளஸ் மற்றும் சாம்சங்கின் 5ஜி போன்கள் அமேசான் விற்பனையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றது. Samsung ஃபோன் ரூ.12,000க்கும் குறைவான விலையிலும், OnePlus ஃபோன் செல்லில் 15 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.

கிரேட் ஃப்ரீடம் விற்பனை முடிந்த பிறகும், அமேசான் இன்னும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த சலுகையில், நிறுவனம் ஒன்பிளஸ் மற்றும் சாம்சங்கின் 5ஜி ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவு விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்தச் சலுகை OnePlus Nord CE 3 Lite 5G மற்றும் Samsung Galaxy M34 5G ஆகியவற்றுக்கு கிடைக்கிறது.

Tap to resize

Latest Videos

ஒன் பிளஸ் நார்ட் சிஇ 3 லைட்

ஒன் பிளஸ் நார்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 ஆகும். ரூபாய் 5,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் விற்பனையில் வாங்கலாம். மாற்றாக, போனின் விலை ரூ.5,000 வரை குறைக்கப்படும். ரூ.960 ஆரம்ப EMIயிலும் இந்த போனை வாங்கலாம். இந்த போன் ஆனது 1080×2400 பிக்சல் கொண்ட 6.72 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ரிப்ரெஷ் ரேட் 120Hz ஆகும். எல்இடி ப்ளாஷ் கொண்ட மூன்று கேமராக்களை வழங்குகிறது. இதில் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் மற்றும் 108 மெகாபிக்சல் மெயின் லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். தொலைபேசி 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்பு விருப்பத்தில் வருகிறது. Snapdragon 695 5G வழங்குகிறது. 5000mAh  பேட்டரி மற்றும் 67W வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்றவற்றை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 34 5ஜி 

சாம்சங் கேலக்ஸி எம் 34 5ஜி (Samsung Galaxy M34 5G) இந்த போனின் விலை ரூ.24,490 ஆகும். இதன் விலை தராது ரூ.18,999 ஆக குறைந்துள்ளது. இந்த செல்போனுக்கு ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனின் விலையை வங்கி தள்ளுபடியில் 2 ஆயிரம் ரூபாய் குறைக்கலாம். ரூ.912 இல் தொடங்குகிறது EMI. இது 080×2340 பிக்சல் கொண்ட 6.5 இன்ச் முழு HD+ Super AMOLED டிஸ்ப்ளே கிடைக்கும்.

இந்த போனில் கொரில்லா கிளாஸ் 5 ஐயும் வழங்குகிறது. இந்த ஃபோன் Exynos 1280 செயலியில் இயங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்காக, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் பிரதான கேமரா அதன் பின் பேனலில் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக, நிறுவனம் இந்த போனில் 13 மெகாபிக்சல் முன் கேமராவை வழங்குகிறது. இந்த போனில் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

click me!