பிஎஸ்என்எல் பேன்சி நம்பர் விற்பனை ஆரம்பம்! ஒரு நம்பருக்கு விலை எவ்வளவு தெரியுமா?

By SG Balan  |  First Published Jan 23, 2025, 9:31 PM IST

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தில் ஃபேன்சி எண்களை இன்று முதல் விற்பனை செய்கிறது. ரூ. 2000 முதல் ரூ. 50,000 வரை 20 ஃபேன்சி எண்கள் விற்பனைக்கு உள்ளன. பிஎஸ்என்எல் இணையதளத்தில் ஏலம் மூலம் வாங்கலாம்.


பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தமிழ்நாடு வட்டத்திற்குள் பயன்படுத்துவதற்கான ஃபேன்சி எண்களை இன்று முதல் விற்பனை செய்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மின்-ஏலத்துக்கான இணையதளத்தின் வழியாக இந்த எண்களை வாங்க முடியும்.

பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தில் இந்த பிரீமியம் ஃபேன்சி நம்பர்கள் கிடைக்கும். 20 பேன்சி எண்களையும் அவற்றின் விலையையும் பிஎஸ்என்எல் தனது ஏல வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த எண்களை ஏலம் மூலம் வாங்கிக்கொள்ளலாம். எண்களின் விலை குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் ஆரம்பமாகிறது. அதிகபட்சமாக ரூ. 50,000 வரை ஃபேன்சி எண்கள் விற்பனைக்கு உள்ளன.

Latest Videos

20 பிரீமியம் ஃபேன்சி எண்களும் அவற்றின் விலையும்:

பிஎஸ்என்எல் ஃபேன்சி நம்பர்

ஆரம்ப விலை

9482194822

ரூ.2,000

8762060000

ரூ.3,000

9483993849

ரூ.3,000

8277111999

ரூ.4,000

9481020304

ரூ.5,000

9483070707

ரூ.5,000

9481801008

ரூ.5,000

9483118311

ரூ.5,000

9480301111

ரூ.7,000

8762812345

ரூ.7,000

8277234567

ரூ.10,000

8762762762

ரூ.10,000

8277582775

ரூ.10,000

8277200000

ரூ.13,000

8277155555

ரூ.15,000

8277444444

ரூ.20,000

8277511111

ரூ.20,000

8277111111

ரூ.22,000

8277177777

ரூ.25,000

8277199999

ரூ.50,000

பிஎஸ்என்எல் (BSNL) ஃபேன்சி நம்பர்களை வாங்குவது எப்படி?

eauction.bsnl.co.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி, விருப்பனமான நம்பரை தேர்வு செய்து பதிவு கட்டணத்தைத் செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணத்தை பின்னர் திரும்பப்பெறலாம். தேர்வு செய்த எண்ணுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகையையும் குறிப்பிட வேண்டும். அதிக தொகை கொடுப்பவருக்கு அந்த எண் கிடைக்கும். ஏலத்தில் வாங்கிய நபருக்கு சில நாட்களில் அந்த எண் வழங்கப்படும்.

click me!