ஏர்டெல் நெட்வொர்க்கில் கடந்த மாதம் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வாய்ஸ்கால், டேட்டா கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு அனைத்து பிளான்களிலும் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்த உள்ளது.
இது தொடர்பான விவரங்களை ஏர்டெலின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் கூறியுள்ளார். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57 சதவீதம் உயர்த்தியது. இந்த நிலையில் மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ஏர்டெல் குறித்த கேள்விக்கு நிறுவனத்தின் தலைவர் சுனில் பதிலளித்தார். அதில் அவர், ஏர்டெல் நிறுவனம் நிறைய மூலதனத்தை செய்துள்ளது.
undefined
இருப்பினும் அதற்கு ஏற்ப தொழில்துறையில் மூலதனத்தின் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு கட்டண உயர்வு இருக்கலாம். "சம்பளம் உயர்ந்துள்ளது, வாடகை உயர்ந்துள்ளது, மக்கள் பெரிய அளவில் எதுவும் செலுத்தாமலேயே 30 ஜிபியை பயன்படுத்துகிறார்கள். நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு நிறுவனம் தேவை. இந்தியாவின் கனவு டிஜிட்டல், பொருளாதார வளர்ச்சி முழுமையாக நனவாகியுள்ளது.
Twitter போல் Facebook, Instagram தளத்திலும் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம்?
அரசாங்கம் முழு விழிப்புணர்வோடு இருக்கிறது, மக்களும் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்" என்று சுனில் மிட்டல் கூறினார். முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ₹ 99 ரூபாய்க்கு 200 எம்பி டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ₹ 2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கி வந்தது. ஆனால், அந்த திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் ARPU இலக்கு என்பது ₹200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏர்டெலில் இப்போது சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி சேவையில் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் 4ஜி அல்லது 5ஜிக்கு மாறும் வரை நிறுவனம் 2ஜி சேவைகளை நிறுத்தாது என்றும் மிட்டல் கூறினார்.
புதிய Twitter CEO அதிகாரியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!