சமீபத்தில் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வோர்ல்ட் காங்கிரஸில் கலந்து கொண்ட சுனில் பார்தி மிட்டல் ஜியோ சலுகை பற்றி பல கருத்தை தெரிவித்தார் .
ஜியோவின் எண்ணிலடங்கா சலுகையால் தொடர்ந்து மக்களின் மனதில், நீங்கா இடம் பிடித்த ஜியோவால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் லாபத்தில் சரிவை கண்டது.
இந்நிலையில் வரும்ஏப்ரல் மாதம் முதல், ஜியோ கட்டணம் வசூலிக்க உள்ளது என்பது வரவேற்கத்தக்கது என்றும், அதேவேளையில், இலவசத்திற்கு பதிலாக தான் , ஜியோ மிக குறைந்த கட்டணத்தில் கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது என மிட்டல் தெரிவித்தார்.
ஜியோவால் லாபம் குறைந்தது
undefined
ஜியோவின் சலுகையால், கடந்த அக்டோபர் டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 54 சதவீதம் குறைந்து ரூ.503 கோடியாக குறைந்ததாகவும், இந்த நிலைமை மாற இன்னும் ஓராண்டு காலம் ஆகும் எனவும் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார் .
மேலும் ஜியோவின் இந்த கட்டணத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்