
இந்தியாவில் முன்னணி டெக் நிறுவனமான ASUS மற்றும் Republic of Gamers (ROG) இணைந்து, 'Built for Originals' என்ற பெயரில் தங்களது புதிய 2026 ஆம் ஆண்டிற்கான கிரியேட்டர் லேப்டாப் சீரிஸை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன. கேமர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் (Content Creators) மற்றும் புரொஃபஷனல்களுக்காக பிரத்யேகமாக இந்த லேப்டாப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சீரிஸில் ProArt GoPro Edition (PX13), கேமிங் பிரியர்களுக்கான லிமிடெட் எடிஷன் ROG Flow Z13-KJP மற்றும் 2026 TUF Gaming A14 என மூன்று அட்டகாசமான மாடல்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்ட AMD Ryzen AI Max+ ப்ராசஸர்கள் மூலம் இயங்குவதால், அதிநவீன AI தொழில்நுட்பத்துடன் கூடிய அசுர வேக பெர்ஃபார்மன்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீடியோ எடிட்டிங் மற்றும் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த ProArt GoPro Edition. வெறும் 1.39 கிலோ எடைகொண்ட இந்த லேப்டாப்பில், 13.3 இன்ச் 3K Lumina OLED டச் ஸ்கிரீன் மற்றும் 128GB வரையிலான ரேம் (RAM) வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரத்யேக GoPro ஹாட்கீ, StoryCube AI மற்றும் MuseTree AI போன்ற அசத்தலான டூல்ஸ் இடம்பெற்றுள்ளன. இதன் ஆரம்ப விலை ரூ. 3,34,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை வாங்குபவர்களுக்கு ரூ. 62,500 மதிப்புள்ள GoPro MAX2 கேமரா பண்டல் 35 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் என்ற சூப்பரான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
பிரபல KOJIMA PRODUCTIONS நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட லிமிடெட் எடிஷன் மாடல் தான் இந்த ROG Flow Z13-KJP. அறிவியல் புனைகதை டிசைனில் (Sci-Fi armour design) உருவாகியுள்ள இந்த லேப்டாப்பில் 13.4 இன்ச் 2.5K 180Hz டிஸ்ப்ளே மற்றும் Radeon 8060S கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டேப்லெட் மோடில் பயன்படுத்தக்கூடிய இதன் எடை வெறும் 1.25 கிலோ மட்டுமே. பிப்ரவரி 26 முதல் முன்பதிவு தொடங்கும் இதன் விலை ரூ. 3,79,990 ஆகும். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'Death Stranding 2' கேமிற்கான இலவச ஸ்டீம் கோடு (Steam code) பரிசாக வழங்கப்படும்.
மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் சிறந்த கேமிங் மற்றும் எடிட்டிங் லேப்டாப்பை தேடுபவர்களுக்கான சரியான தேர்வு இந்த ASUS TUF Gaming A14. இதில் 14 இன்ச் 2.5K 165Hz டிஸ்ப்ளே, 32GB ரேம் மற்றும் 1TB SSD ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ தரத்திலான உழைப்பைக் கொடுக்கும் MIL-STD-810H டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இதன் ஆரம்ப விலை ரூ. 1,79,990 ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று மாடல்களிலும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஹோம் 2024 (Microsoft Office Home 2024) மற்றும் 100GB கிளவுட் ஸ்டோரேஜ் உடன் கூடிய மைக்ரோசாப்ட் 365 பேசிக் போன்ற அம்சங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.