50 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள கொள்ளை போன பொருட்களை கண்டுபிடிக்க ஆப்பிள் ஏர்டேக் உதவியுள்ளது.
ஆப்பிள் ஏர்டேக் (Apple AirTag) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய தயாரிப்பாக இருந்து வருகிறது. மேலும் இது கடந்த சில ஆண்டுகளில் பலமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
ஏர்டேக் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையான வெளிச்சத்தில் காட்டப்பட்டாலும், $62,000 (ரூ. 50 லட்சம்) திருட்டுகளில் திருடிய கொள்ளையர்களை முறியடிக்க இது உதவியுள்ளது என்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. AppleInsider இன் அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க குடும்பம் கொள்ளையர்களால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
undefined
அவர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க, அவர்கள் மறைக்கப்பட்ட Apple AirTag ஐ நிறுவினர். அந்த நேரத்தில், ஏர்டேக்கின் புத்திசாலித்தனமான பயன்பாடு, $62,000க்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வெண்கல நினைவுக் குவளைகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுயது என்பதே பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாகும்.
இவ்வளவு கொள்ளை பொருட்களை பிடிப்போம் என்று குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. டோனி வெலாஸ்குவேஸின் கூற்றுப்படி, டெக்சாஸின் க்ளூட்டில் உள்ள ரெஸ்ட்வுட் மெமோரியல் பூங்காவில் உள்ள அவரது மாமாவின் கல்லறை அடிக்கடி திருடப்பட்டது. ஒவ்வொரு முறையும், கல்லறையை அலங்கரித்த ஒரு வெண்கல நினைவுக் குவளை 600 டாலர்களுக்கு விற்கப்படும்.
எனவே அவர்கள் ஒரு ஏர் டேக்கை குவளைக்குள் மறைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் 45 நிமிடங்கள் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் குவளை மற்றும் டஜன் கணக்கானவற்றைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தினர். கடந்த இரண்டு மாதங்களில் 102 குவளைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களை உள்ளூர் அதிகாரிகள் கைது செய்தனர்.
க்ளூட் போலீஸ் தலைவர் ஜேம்ஸ் ஃபிட்ச் கூறுகையில், திருடர்கள் குவளைகளை அருகிலுள்ள ஸ்கிராப் யார்டில் விரைவான லாபத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளனர்” என்று கூறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samsung Galaxy M34 5G : நோ ஷேக் கேமரா.. செம பேட்டரி.! மாஸ் கம்பேக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி M34 5G