ஹைடெக் அம்சங்கள், பவர்புல் என்ஜின்.... அதிரடியாய் அறிமுகமான 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்...!

By Kevin Kaarki  |  First Published May 16, 2022, 2:07 PM IST

2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.


ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் இந்திய விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. வினியோகம் இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, ஆட்டோபயோகிராபி (Autobiography) மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் (Fist Edition) என நான்கு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. வெளிநாட்டு சந்தைகளில் 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

Tap to resize

Latest Videos

ஏராளமான நிறங்கள்:

எனினும், இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. நிறங்களை பொருத்தவரை 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஏராளமான புது ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புது 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை மட்டும் இன்றி ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் அம்சங்களும் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. 

அதன்படி 2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 350 ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடுகிறது. இத்துடன் அதிகபட்சமாக மணிக்கு 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

மைல்டு ஹைப்ரிட்:

லேண்ட் ரோவர் வலைதளத்தின் படி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களும் இந்திய சந்தையில்  விற்பனைக்கு வரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் 3 லிட்டர், P400 ஸ்டிரெயிட் 6 இன்ஜெனியம் மற்றும் 4.4 லிட்டர் பி.எம்.டபிள்யூ. வி8 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இவை முறையே 394 ஹெச்.பி. பவர் மற்றும் 525 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. CBU முறையில் இந்தியா கொண்டுவரப்படுவதால் அதிகளவு இறக்குமதி வரி காரணமாக புதிய ரேண்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை அதிகமாகி இருக்கிறது. 

விலை விவரங்கள்:

ரேண்ஜ் ரோவர் ஸ்போர்ட் டைனமிக் SE ரூ. 1 கோடியே 64 லட்சம்
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் டைனமிக் HSE ரூ. 1 கோடியே 71 லட்சம்
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்  ஆட்டோபயோகிராபி ரூ. 1 கோடியே 81 லட்சம்
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் எடிஷன் ரூ. 1 கோடியே 84 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

2022 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலின் அனைத்து வெர்ஷன்களிலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 13.1 இன்ச், பிவி ப்ரோ தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 13.7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 3 ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை தவிர ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப புது ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் ஏராளமான புது அம்சங்களை கொண்டிருக்கிறது. 

போட்டி நிறுவன மாடல்கள்:

இந்திய சந்தையில் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் போர்ஷ் கயென் மற்றும் மசிராட்டி லிவாண்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் டிஸ்கவரி, இவோக், வெலார், டிபெண்டர் மற்றும் ரேன்ஜ் ரோவர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

click me!