மொமைல் ஸ்டோரஜ் தீர்ந்து போச்சா? வாட்ஸ்அப்பில் இதை மட்டும் செய்தால் போதும்! நிறைய மெமரி சேமிக்கலாம்!

By SG Balan  |  First Published Jun 21, 2023, 7:52 PM IST

போட்டோ, வீடியோ, GIF, PDF போன்ற கோப்புகள் தானாகப் டவுன்லோட் செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது.


வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். மக்கள் நிறைய குரூப்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். சிலர் வாட்ஸ்அப் குரூப்பில் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வார்கள். அந்த குருப்பில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் அவை அனைத்தும் தானாகவே உங்கள் மொபைலில் டவுன்லோட் ஆகிவிடும்.

இப்படி குடும்பம், அலுவலகம் மற்றும் நண்பர்கள் இருக்கும் குழுக்களில் பல போட்டோ, வீடியோக்கள் குவிந்துகொண்டே இருக்கும். இதனால், மொபைலின் மெமரி ஸ்டோரேஜ் நிரம்பி வழியும். இதைத் தவிர்ப்பதற்காக குருப்பில் பகிரப்படும் அனைத்தும் டவுன்லோட் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

Latest Videos

undefined

போட்டோ கிளாரிட்டி இல்லையா? மொபைல் கேமராவை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

அனைத்தும் டவுன்லோட் செய்யப்பட்டால், போன் மெமரி ஃபுல் ஆகும்போது, தேவை இல்லாததைப் பார்த்து அழிக்க அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, மீடியா கோப்புகள் தானாகப் டவுன்லோட் செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது.

ஆனால், மீடியா கோப்புகளை தானாக டவுன்லோட் செய்வதை ஆஃப் செய்தால், அதற்குப் பின் பகிரப்படும் போட்டோ, வீடியோ, GIF போன்ற மீடியா ஃபைல்களை தானாக டவுன்லோட் செய்யப்படாது. அதே சமயத்தில் ஏற்கெனவே டவுன்லோட் செய்யப்பட்டவை அப்படியே இருக்கும்.

மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை கொடுத்த 'இன்போசிஸ்' நந்தன் நிலேகனி!

வாட்ஸ்அப்பில் ஆட்டோ டவுன்லோட் வசதியை முடக்க Settings பகுதிக்குச் சென்று, Storage and Date என்பதைத் தேர்வு செய்யவும். அதில், Media Auto Download என்பதற்குக் கீழ் உள்ள அனைத்திலும் No Media என்பதைத் தேர்வு செய்யவும். இதைச் செய்துவிட்டால், உங்களுக்கு வரும் போட்டோ, வீடியோ போன்ற கோப்புகள் எதுவும் தானாக டவுன்லோட் ஆகாது. விரும்பினால் நீங்களே அவற்றை தேர்வு செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இந்த அம்சத்தின் கூடுதல் நன்மை என்னவென்றால், இதன் மூலம் போன் மெமரி சேமிக்கப்படுவதுடன் மொபைல் இன்டர்நெட் வீணாக செலவு செய்யப்படுவதையும் குறைக்க முடியும். அனைத்து கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யவில்லை என்பதால், டவுன்லோட் செய்வதற்குத் தேவையான டேட்டாவும் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் மொபைல் டேட்டாவும் மிச்சம் ஆகிறது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

click me!