கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன் வெடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ஸ்மார்ட்போன் பேட்டரிகள் ஏன் வெடிக்கின்றன? அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.
ஸ்மார்ட்போன் வெடிப்பது என்பது முதல் முறை அல்ல. 91Mobiles தளத்தில் வெளியான தகவலின்படி, சமீபத்தில் பீகாரில் பயனர் ஒருவர் தனது பெட்ரூமில் Xiaomi 11 Lite NE ஃபோவை வைத்திருந்த போது வெடித்தது. பீகாரில் உள்ள பாகல்பூரில் உள்ள மொஹதிநகரில் வசிக்கும் சஞ்சீவ் ராஜா என்பவருக்கு இது நிகழ்ந்தது. அவர் தனது போனின் தீப்பிடித்த வீடியோக்கள் மற்றும் படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
Xiaomi ஃபோன் வெடித்தது: என்ன நடந்தது?
undefined
இதற்கு முன்பெல்லாம் ஸ்மார்ட்ஃபோன்கள் சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது வெடித்தன, ஆனால் இப்போது அப்படி இல்லை. சார்ஜருடன் இணைக்கப்படாத போதும் கூட போன் வெடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், தொலைபேசி வெடிக்கும் போது யாரும் அதன்அருகில் இல்லை. தொலைவில் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ராஜா தனது Xiaomi 11 Lite NE 5G, டிசம்பரில் 2021 ஆண்டில் வாங்கியதாகும், அது படுக்கையில் வைக்கப்பட்டிருந்தபோது திடீரென புகை வெளியேறத் தொடங்கியதாக என்று கூறினார். பின்பு, வெடித்ததில் பாதி மெத்தை எரிந்து சாம்பலானது.
ஷாவ்மி நிறுவனம் என்ன சொன்னது?
Xiaomi நிறுவனம் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்தது. பின்பு வெளிவந்த தகவலின்படி, சம்பவத்திற்கான காரணம் ஸ்மார்ட்போன் லேசாக உடைந்திருந்ததாக கூறப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட பஞ்சர் அடையாளங்களால் சேதம் ஏற்பட்டது, இதனால் இது 'வாடிக்கையாளர்' தரப்பில் ஏற்பட்ட விபத்து என்று கூறப்படுகிறது.
விளக்கப்பட்டது: தொலைபேசிகள் ஏன் வெடிக்கின்றன?
ஸ்மார்ட்போன் வெடிப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் கேள்வி என்னவென்றால் - ஸ்மார்ட்போன்கள் ஏன் சரியாக வெடிக்கின்றன? பெரும்பாலான நேரங்களில், ஸ்மார்ட்போன் வெடிப்பு என்பது பேட்டரியுடன் தொடர்புடையவை. எனவே, போனின் பேட்டரி நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.
போன்கள் வெடிப்பதைத் தடுப்பது எப்படி?
பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் வெடிப்பு சம்பவங்களுக்கு முன் எச்சரிக்கின்றன. உதாரணமாக, சில வித்தியாசமான சத்தம், அல்லது பிளாஸ்டிக், கெமிக்கல் எரியும் வாடை வரலாம். அல்லது ஸ்மார்ட்போன் அடிக்கடி வெப்பமடையலாம். பயனர்களும் இந்த எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் உடனடியாக ஸ்மார்ட்போனை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல செல்ல வேண்டும்.
ஜியோவின் லேட்டஸ்ட் ரீசார்ஜ் பிளான்.. ரூ.500க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் இதோ!
இப்போது, ஃபோன் வெடிப்பு சம்பவங்களை முதலில் நிகழாமல் தடுக்க, பயனர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் உள்ளன.