கூகுளில் தப்பு தப்பா தேடாதீங்க... உதவி செய்ய வரும் 'கிராமர் செக்' வசதி! பயன்படுத்துவது எப்படி?

By SG Balan  |  First Published Aug 8, 2023, 4:59 PM IST

கூகுளில் தேடும்போது வார்த்தைகளில் தவறு ஏற்படாமல் தவிர்க்க, கிராமர் செக் என்ற பிழைகளைச் சுட்டிக்காட்டும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.


கூகுள் நிறுவனம் பயனர்களின் தேடலுக்கு பல புதிய புதிய வசதிகளைக் கொடுத்து வருகிறது. சமீபத்தில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் பல்வேறு அம்சங்களைப் புகுத்துவதில் கூகுள் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் எழுத்து மற்றும் வாக்கியப் பிழைகளைத் திருத்தும் வசதி கூகுள் சர்ச்சில் அறிமுகமாகிறது.

ஏற்கெனவே, ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும்போதும் கூகுள் டாக்ஸில் டைப் செய்யும்போது இதேபோன்ற பிழை திருத்தும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிழை திருத்தும் வசதி ஒரு வாக்கியத்தில் இலக்கணத்தை சரிபார்க்கும் திறன் கொண்டது. தற்போது, ஆங்கிலத்தை மட்டுமே இது சிறப்பாக செயல்படுகிறது. தமிழில் ஓரளவுக்கு சரியாக இருக்கிறது.

Latest Videos

undefined

இதைத் தவிர இனி டெஸ்க்டாப் மற்றும் மொபைல்களில் கூகுள் சர்ச் மூலமும் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை டைப் செய்து அது இலக்கணப்படி சரியாக இருக்கிறதா என்றுசோதிக்கலாம். கூகுளின் கூற்றுப்படி, இந்த இலக்கணச் சரிபார்ப்புக் கருவி ஒரு சொல், அல்லது வாக்கியம் இலக்கணப்படி சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்கும். சரியாக இல்லை என்றால், அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும்.

இந்தியா முழுவதும் என் வீடுதான்! 4 மாதங்களுக்குப் பின் பழைய எம்.பி. பங்களாவுக்குத் திரும்பும் ராகுல் காந்தி!

கூகுள் தேடலில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய மாற்றத்தை கூகுள் கொண்டுவந்திருக்கிறது. கூகுள் சர்ச் பக்கத்திற்குச் சென்று ஒரு வாக்கியத்தை டைப் செய்து, அதைத் தொடர்ந்து "Grammar Check" என்பதையும் சேர்த்துத் தேட வேண்டும். அப்போது அந்த வாக்கியம் இலக்கணப்படி சரியாக இருக்கிறதா என்று காட்டிவிடும்.

கூகுள் தேடலில் இலக்கண சரிபார்ப்பு வசதியை எவ்வாறு பயன்படுத்துவது?

- டெஸ்க்டாப் அல்லது மொபைல் மூலம் கூகுள் தேடல் பக்கத்திற்குச் செல்லவும்.

- சரிபார்க்க வேண்டிய வாக்கியத்தை டைப் செய்து, பின்னர் "Grammar Check" என்பதையும் சேர்க்கவும்.

- பிறகு Search பட்டனை கிளிக் செய்யவும்.

- வாக்கியத்தின் இலக்கணம் சரியாக இருந்தால், அதற்கு அருகிலேயே ஒரு பச்சை நிற 'டிக்' குறி தோன்றும்.

- இலக்கணப் பிழைகள் ஏதும் இருந்தால், தவறான வார்த்தைகள் போல்டான எழுத்துக்களில் தோன்றும். அதுமட்டுமின்றி அதை எப்படி சரிசெய்யலாம் என்பதையும் கூகுள் பரிந்துரைக்கும்.

- சரிசெய்யப்பட்ட பொருத்தமான சொற்றொடரை காப்பி செய்து வேறு கோப்புகளில் ஒட்டிக்கொள்ளலாம். அல்லது மின்னஞ்சலிலும் சேர்த்து பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த இலக்கணச் சரிபார்ப்பு முற்றிலும் துல்லியமாக இருக்காது என்றும் கூகுள் எச்சரிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கூகுள் I/O 2023 மாநாட்டு செயற்கை நுண்ணறிவு பயன்பாடுக்கு கூகுள் நிறுவனம் முதன்மையான முன்னுரிமை அளிக்கிறது என்பதைப் வெளிப்படுத்தியது. கூகுள் தனது அனைத்து தயாரிப்புகளிலும் எவரும் பயன்படுத்தக்கூடிய எளிமையான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இருக்கவேண்டும் என்ற நோக்கில் முயற்சி செய்துவருகிறது.

இப்படி பார்த்ததே இல்ல... அதிசயித்து போன விஞ்ஞானிகள்! உடைந்த உலோகம் தானாகச் சேர்ந்த அதிசயம் நடந்தது எப்படி?

click me!