வாட்ஸ்அப் சேனலில் இணைந்தால் பிரைவசி பறிபோகுமா? புதிய அப்டேட்டில் என்ன இருக்கிறது?

By SG Balan  |  First Published Sep 24, 2023, 8:57 PM IST

சேனல்களில் வரும் செய்திகளுக்கு அந்தச் சேனல்களை ஃபாலோ செய்பவர்கள் பதிலளிக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.


வாட்ஸ்அப்பில் சமீபத்தில் சேனல்கள் என்ற புதிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது போன்ற அம்சம் ஆகும். வாட்ஸ்அப் பயனர்கள் விரும்பமான சேனல்களில் இணைந்து அதில் வரும் செய்திகளைப் பார்க்க முடியும். இது பயனர்களுக்கு பிரைவசி, ரியாக்‌ஷன், சேனல் பதிவுகளை பார்வேர்ட்உ செய்து உள்ளிட்ட பல அம்சங்களை வழங்குகிறது. இப்போது சேனல் அலர்ட் என்ற மற்றொரு அம்சத்தையும் கொண்டு வருகிறது. மேலும், சேனல் பதிவுகளுக்கு ரிப்ளை செய்யும் அம்சத்தையும் சோதித்து வருகிறது.

ஆண்ட்ராய்டில் உள்ள பீட்டா பயனர்கள் 2.23.20.9 அப்டேட்ட மூலம் இந்த வசதியைப் பெறுகிறார்கள். இது ஒரு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. சேனல்களை உருவாக்குபவர்கள் தங்கள் சேனல்களின் நிலையைப் பற்றி அறியும் வகையில் புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஐபோன் 15 வாங்கப் போவதாக அறிவித்த எலான் மஸ்க்! காரணம் என்ன சொன்னார் தெரியுமா?

வெவ்வேறு நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்கள் காரணமாக குறிப்பிட்ட சேனல்களை சில நாடுகளில் பார்க்க முடியாது. அந்நாடுகளின் சட்டப்படி சில சேனல்கள் கட்டுப்படுத்தப்படும். அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட சேனல்கள் குறித்த விவரங்களை அவற்றை உருவாக்கியவர்கள் தெரிந்துகொள்ளும் அம்சம் புதிய அப்டேட்டில் உள்ளது.

இந்த வகையில் புதிதாக ஏதேனும் ஒரு நாட்டில் சேனலின் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்டால், அதைப்பற்றி சேனல் உருவாக்கியவருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதாவது, சேனல் செயல்பாடு கட்டுப்படுத்தப்பட்ட நாட்டின் போன் நம்பரைக் கொண்ட பயனர்கள் சேனலை அணுகவோ பின்தொடரவோ முடியாது.

இத்துடன் சேனல் பதிவுகளுக்கு ரிப்ளை செய்யும் அம்சம் பற்றியும் தகவல் வந்திருக்கிறது. இந்த வசதி வரவிருக்கும் அப்டேட்களில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. "சேனல்களில் வரும் செய்திகளுக்கு அந்தச் சேனல்களை ஃபாலோ செய்பவர்கள் பதிலளிக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது" என்று கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட சேனலில் உள்ள செய்திக்கு எத்தனை ரிப்ளை வந்துள்ளது என்பதையும் காணமுடியும். சேனல்களை பின்தொடர்பவர்கள் பற்றிய மொபைல் எண்ணை போன்ற தனிப்பட்ட தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதற்கான பிரைவசி உத்தரவாதத்தையும் வாட்ஸஅப் கொடுக்கிறது.

அடுத்த 2 ஆண்டுகளில் ஐ.டி. துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள்: அமைச்சர் தியாகராஜன் வாக்குறுதி

click me!