புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் ஸ்பேம் தொடர்புகளை லாக் ஸ்கிரீனில் பார்த்தாலும் நோட்டிஃபிகேஷன் பகுதியில் வைதுதே அந்த நம்பரை பிளாக் செய்துவிடலாம். இது பயனர்கள் மோசடி ஆபத்து உள்ள கணக்குகளைத் தவிர்க்க உதவுகிறது.
சமீப காலமாக ஆன்லைன் மோசடி வழக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன. தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகள் அல்லது வரும் மெசேஜ்களை நம்பி ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் பயனர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் மாறியுள்ளது. பிரைவசி அம்சங்கள் பல இருந்தாலும், பயனர்கள் பலர் மோசடி கும்பலின் வலையில் விழுகிறார்கள். இந்தப் பாதிப்பை உணர்ந்து, வாட்ஸ்அப் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொண்டே வருகிறது.
இந்த வகையில் சமீபத்திய அப்டேட்டில் புதிய அம்சம் ஒன்று வந்திருக்கிறது. இது லாக் செய்யப்பட்ட திரையில் கூட, ஸ்பேம் அல்லது சந்தேகத்திற்குரிய நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருந்தால் அதை, லாக்கை எடுக்காமலே நோட்டிஃபிகேஷன் பகுதியிலேயே நம்பரை பிளாக் செய்யலாம்.
சிஸ்கோவில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்! லாபத்தை அதிகரிக்க வேற ஐடியா இருக்காம்!
இந்தப் புதிய வாட்ஸ்அப் அம்சமானது மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தகவல்களை அனுப்பும் எந்தவொரு நம்பரையும் விரைவாக பிளாக் செய்ய முடியும். புதிய வாட்ஸ்அப் அம்சத்தை நோட்டிஃபிகேஷன் பகுதியில் Quick Actions மெனுவில் Reply ஆப்ஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் Block என்ற ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
ஆனால் வாட்ஸ்அப்பில் ஏற்கெனவே பிளாக் மற்றும் ரிப்போர்ட் ஆப்ஷன் இருக்கும்போது மற்றொரு அம்சம் ஏன் என்ற கேள்வி வரலாம். இப்போது வரை, வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனில் தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ் குறித்து எச்சரிக்கை மட்டுமே இடம்பெற்றது. அந்த நம்பரை பிளாக் செய்ய வேண்டும் என்றால் லாக்கை நீக்கி சாட்டைத் திறக்க வேண்டும். இதனால், பயனர்கள் பெரும்பாலும் ஸ்பேம் செய்திகளை பிளாக் செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.
இந்தப் புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் ஸ்பேம் தொடர்புகளை லாக் ஸ்கிரீனில் பார்த்தாலும் நோட்டிஃபிகேஷன் பகுதியில் வைதுதே அந்த நம்பரை பிளாக் செய்துவிடலாம். இது பயனர்கள் மோசடி ஆபத்து உள்ள கணக்குகளைத் தவிர்க்க உதவுகிறது.
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை அறிமுகம்!