இன்ஸ்டாகிராமில் வரவிருக்கும் 'ஃபிளிப்சைடு' அம்சம்! எப்படி யூஸ் பண்ணுறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

By SG BalanFirst Published Feb 3, 2024, 2:45 PM IST
Highlights

முதன்முதலில் பிளிப்சைடு அம்சத்தை உருவாக்கும் முயற்சியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2023 இல் தொடங்கியது. ஆனால் அந்த நேரத்தில், இது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் உள் பயன்பாட்டுக்கு மட்டுமே என்று கூறியது.

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பிளிப்சைடு (Flipside) என்ற அம்சத்தைக் கொண்டுவர சோதனை நடைபெறுவதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆடம் மொசேரி கூறியுள்ளார். இந்த சோதனை அம்சம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளை finstas கணக்குகளாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

முதன்முதலில் பிளிப்சைடு அம்சத்தை உருவாக்கும் முயற்சியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2023 இல் தொடங்கியது. ஆனால் அந்த நேரத்தில், இது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் உள் பயன்பாட்டுக்கு மட்டுமே என்று கூறியது.

இப்போது பயனர்களின் கருத்தையும் பெறுவதற்காக பீட்டா சோதனையைத் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த அம்சம் பொது பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று ஆடம் மொசேரி கூறியுள்ளார்.

ஆனால், பயனர்களின் கருத்தைப் பெற்று சோதனை செய்தாலும் இந்த அம்சம் பொது பயன்பாட்டுக்கு வரும் என்பது நிச்சயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவும் இந்த அம்சம் சோதனையில் உள்ளது என்ற தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

500 கிலோ லோடு தாங்கும் கோமாகியின் டிரைக் ஸ்கூட்டர்... இது டிவிஎஸ் எக்ஸ்எல்லையே ஓரங்கட்டும் போல...

2021இல் இருந்து finsta கணக்குகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. தங்களுக்கு விருப்பமான நபர்களுடன் மட்டும் பதிவுகளைப் பகிரும் வகையில் உள்ள இந்த அம்சத்தை பிரபலங்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க செனட்டர் சபை இந்த அம்சத்தை நீக்குவது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது.

தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்தும் நிலையில் உள்ளவர்கள் இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ளாததால் இந்த அம்சம் குழப்பத்தை உருவாக்குகிறது என்று அமெரிக்க செனட் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு ஃபின்ஸ்டாஸ் என்பது இன்ஸ்டாகிராம் அம்சம் அல்ல என்று அந்த நிறுவனம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

மாறாக, ஃபின்ஸ்டாஸ் என்பது நெருங்கிய நண்பர்களுக்காக மட்டும் உருவாக்கப்படும் தனிப்பட்ட கணக்கு என்றும் சமூக ஊடக தளங்களில் பெற்றோரின் மேற்பார்வையைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகவும் இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விளக்கியது.

அஹ்லான் மோடி! அபுதாபியில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 60,000 இந்தியர்கள் முன்பதிவு!

click me!