சுமார் 14 டாலர் விலையுள்ள திட்டத்தில் இணைந்து பயனர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களை விளம்பரம் இல்லாமல் பயன்படுத்தலாம்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் புதிய விளம்பரமில்லாத சேவை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, டிக்டாக் தனது பயனர்களுக்கு இதுபோன்ற சந்தா திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய விளம்பரமில்லாத திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியள்ளது. சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம் பின்னர் அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
சுமார் 14 டாலர் விலையுள்ள திட்டத்தில் இணைந்து பயனர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களை விளம்பரம் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்தச் சமூக வலைத்தளங்களின் இலவச தளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கும் அவர்கள் தேர்வுக்கு ஏற்ப விளம்பரங்களறை அனுமதிக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 8 மொபைல் இன்று ரிலீஸ்; ட்ரெண்டை மாற்றப்போகும் வெப்பநிலை சென்சார்!
பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் டெஸ்க்டாப் இணையதளத்தை விளம்பரம் இல்லாமல் பயன்படுத்த ஒரு மாதத்திற்கு 10 யூரோ ($10.46) வசூலிக்கப்படும் என்றும், கூடுதலாக இணைக்கப்படும் ஒவ்வொரு கணக்கிற்கும் 6 யூரோ கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதுவே மொபைல்களில் விளம்பரம் இல்லாமல் பயன்படுத்த ஒரு கணக்கிற்கான சந்தா கட்டணம் 13 யூரோவாக உயரக்கூடும். ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆப் ஸ்டோர்களில் வசூலிக்கப்படும் கமிஷன்களை மெட்டா ஈடுசெய்ய வேண்டும் என்பதால் மொபைல் சந்தா அதிகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
பெண் போல இருப்பதாக கேலி செய்த தோழிகள்! மனம் உடைந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை!