யூத வெறுப்பு... வார்த்தையை விட்ட எலான் மஸ்க்... விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்த ஆப்பிள், டிஸ்னி!

By SG Balan  |  First Published Nov 18, 2023, 5:16 PM IST

ஆப்பிள், போன்ற பெரிய நிறுவனங்கள் எலான் மஸ்க் பதிவு குறித்த சர்ச்சை அடங்கும் வரை ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.


ட்விட்டரில் அதன் உரிமையாளர் எலான் மஸ்க் யூதர் வெறுப்பு பதிவு ஒன்றை ஆதரித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ட்விட்டரில் விளம்பரம் செய்துவந்த முக்கிய விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை ரத்து செய்துள்ளனர்.

எக்ஸ் என்று பெயர் மாறியுள்ள ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், அவ்வப்போது யூத வெறுப்புக் கருத்துகளைப் பதிவிடும் பயனர்களுடன் உரையாடி வருகிறார். இந்நிலையில், யூத மக்கள் வெள்ளையர்களின் மீது வெறுப்பு கொண்டவர்கள் என்று தெரிவிக்கும் பதிவு ஒன்றுக்கு எலான் மஸ்க், "உண்மையைச் சொன்னீர்கள்" என்று பதிலளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

எலான் மஸ்க் கூறிய கருத்து வெள்ளை மாளிகையில் இருந்தும் உடனடி எதிர்வினையைப் பெற்றுள்ளது. எலான் மஸ்கின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் யூத மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது.\

ஒரே மாதத்தில் 2 லட்சம் ட்விட்டர் கணக்குகளை காலி செய்த எலான் மஸ்க்!

இதற்கிடையில், எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனத்துடன் பங்குதாரர்களாக உள்ளவர்களும் மின்சார கார் தயாரிப்பாளரின் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரும் மஸ்கிற்கு எதிராகப் பேசியுள்ளனர்.

சக அமெரிக்கர்களின் கண்ணியக் குறைவாகப் பேசி, சமூகப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் எவரையும் கண்டிக்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்துடன் பல ஒப்பந்தங்களை வைத்துள்ளன. எலான் மஸ்கின் பேச்சால் அந்த ஒப்பந்தங்கள் ஏதும் ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில் ஆப்பிள், ஆரக்கிள், காம்காஸ்ட், பிராவோ நெட்வொர்க், ஐபிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் எலான் மஸ்க் பதிவு குறித்த சர்ச்சை அடங்கும் வரை ட்விட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளன.

இது வாய்ஸ் கால் மாதிரி இல்ல... வாட்ஸ்அப்பில் புதிய Voice chat வசதியை எப்படி பயன்படுத்துவது?

click me!