உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றேன்! கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்...

 
Published : Jun 12, 2018, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை கொன்றேன்! கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம்...

சுருக்கம்

young man said I was killed aunty

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்டதால் கள்ளக்காதலியின் மாமியாரை அடித்துக் கொலை செய்தேன் என்று கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம்  மானாம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலை விறகு  வெட்டுவதற்காக சென்றார்.   பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றதும் விஜயாவை மருமகள் மதியழகி தேடி சென்றபோது, மானாம்பேட்டை முத்துக்கோனார்  புளியங்கூண்டு கொல்லையில் விஜயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றிய புகாரின்பேரில், நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக நேற்று விஜயாவின் 2வது மகன் செந்தில், அவரது மனைவி  பரிமளா  மற்றும் பரிமளாவின் கள்ளக்காதலன் சின்னமணி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது சின்னமணி அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; அதில்,  பரிமளாவுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தோம். ஒருநாள் விறகு வெட்டுவதற்கு வந்த விஜயா, நாங்கள் நெருக்கமாக  இருந்ததை பார்த்து விட்டார். அப்போது எங்களை விஜயா திட்டியதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விஜயா உயிருடன் இருந்தால் ஊருக்குள் சென்று சொல்லி  அசிங்கப்படுத்திவிடுவார் என்று பயந்து நானும், பரிமளாவும் சேர்ந்து விஜயாவை கட்டையால் அடித்தோம். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த விஜயா இறந்துவிட்டார்.  பின்னர் விஜயாவின் சடலத்தை முட்புதரில் வீசினோம். அப்போது தாய் விஜயாவை தேடிவந்த செந்தில் எங்களை பார்த்துவிட்டார்.

மகன் செந்திலை பிடித்துவைத்துக்கொண்டு இந்த கொலை பற்றி யாரிடமாவது கூறினால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். இதனால் உயிருக்கு பயந்து  யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். இதன்பிறகு நாங்கள் 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டோம். போலீசார் விசாரித்து எங்களை  பிடித்துவிட்டனர் இவ்வாறு கள்ளக்காதலன் சின்னமணி கூறினார்.

இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி பரிமளா, கள்ளக்காதலன் சின்னமணி மற்றும் கொலையை மறைத்ததாக மகன் செந்தில் ஆகியோரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!