
மிமிக்ரி கலைஞரான நவீனின் இரண்டாவது திருமணத்தை, முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். நவீனுக்கு எதிராக
திவ்யலட்சுமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
நீலாங்கரை போலீசார் திவ்யலட்சுமியிடமும் நவீனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, நவீன், திவ்யலட்சுமியை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் திவ்ய லட்சுமியோ, என்னை காதலித்து விட்டு திருமணம் செய்து விட்டு, ஏமாற்றிய நவீனை சும்மா விடமாட்டேன் என்கிறார்.
இது குறித்து திவ்யலட்சுமி பேசும்போது, நவீன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் தகவல் கிடைத்ததும் அவரிடம் போனில் பேசினேன். அவருக்கும்
எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக அவரை காதலித்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டார்.
என்னை சமாதானப்படுத்திவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். என்னுடைய வாழ்க்கையைக் கேட்டால் எப்படி கொடுக்க
முடியும். நானும் நவீனும் அரக்கோணத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். அவரை கட்டாயப்படுத்தி நான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் பதிவு திருமணத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். போலீஸ் நிலையத்தில் கூட நவீனுக்கு ஆதரவாக என்னிடம் பலர் பேரம் பேசினர்.
யாரையும் நான் அசிங்கப்படுத்தவில்லை. அவரால் நானும் என் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளோம். அவருடன் என்னால் வாழ முடியாது என்று விலகிவிட்டேன். திவ்ய லட்சுமி பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்கிறார் மிமிக்ரி நவீன்.