
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரையும், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவி ஒருவர், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
புதுச்சேரி, லிங்கரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் அருண்குமார். அந்த மாணவி, பள்ளிக்கு சென்று வரும் சமயத்தில், கட்டாயப்படுத்தி அருண்குமார் பேசி வந்துள்ளார். மேலும் தனது செல்போன் எண்ணைக் கொடுத்தும் வலுக்கட்டயமாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், அருண்குமார், அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ந்து போயினர். இது குறித்து கோட்டக்குப்பம் மகளிர் போலீசில் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்ற போலீசார், அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனனர்.
இதேபோல் மற்றொரு சம்பவமும் அந்த பகுதியில் நடந்துள்ளது. 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வானூர் அருகே கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் முதியவர் கலைவாணன். இவருக்கு வயது 60. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், சாக்லெட் வாங்கிக் கொடுத்து, தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனை அடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கலைவாணனை கைது செய்தனர்.