இளம் பெண்ணை 3 மாதங்களாக கற்பழித்த தோழியின் தந்தைகள்! ஆபாச படமெடுத்து மிரட்டி அனுபவித்த கொடுமை...

 
Published : Jun 14, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இளம் பெண்ணை 3 மாதங்களாக கற்பழித்த தோழியின் தந்தைகள்! ஆபாச படமெடுத்து மிரட்டி அனுபவித்த  கொடுமை...

சுருக்கம்

young girl was allegedly raped by her friends fathers

தோழிகளின் தந்தைகள் இளம் பெண்ணை மூன்று மாதங்களாக பலவந்தமாக மாறி மாறி கற்பழித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது  பெரும் அதிர்ச்சியளிக்கின்றது.

சென்னை பனையூரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் அங்குள்ள ஒரு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பு தோழியின் வீடு, தான் வசிக்கும் பகுதியிலேயே இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று விட்டு வருவாராம். இதுபோல் பலமுறை தோழியின் வீட்டுக்கு மாணவி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பள்ளி சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பும்போது முகம் வெளிறி காணப்பட்டது. அத்துடன் அழுதவாறே வீட்டுக்குள் நுழைந்தாள். இதனை கண்ட பெற்றோர் ஒன்றும் புரியாமல் மகளிடம் என்ன, ஏதென்று விசாரித்தனர்.

அதற்கு மாணவியோ, வழக்கமாக வீட்டுக்கு சென்றுவரும் தோழியின் அப்பா, வீட்டில் விட்டுவிடுவதாக கூறி தன்னை ஆட்டோவில் கடத்தி சென்றுவிட்டதாகவும், பின்னர் ஒரு மறைவான இடத்தில் வைத்து தன்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார் என்றும் கண்கலங்கியபடியே தெரிவித்தாள். மகள் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியில் பதறி அழுத பெற்றோர், உடனடியாக கானத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த தோழியின் அப்பா பெயர் மன்சூர் அலிகான். வயது 38 ஆகிறதாம்.

பெற்றோரின் புகாரினை வழக்காக பதிவு செய்த போலீசார் மன்சூர் அலிகானை உடனடியாக பிடித்து விசாரித்தனர். விசாரணையில், "என் மகளை தேடி அடிக்கடி இந்த சிறுமி வருவாள். வரும்போது நிறைய முறை பலவந்தமாக படுக்கை அறைக்கு அழைத்துசென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளேன்.

இந்தநேரத்தில் என்னுடைய வீட்டிற்கு வந்த எனது மகளின் மற்றொரு தோழியின் தந்தையும் எனது நண்பருமான ரகமதுல்லா 35, என்பவர் நேரில் பார்த்துவிட்டார். அதனால் அவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததை படம் பிடித்தேன்.

இந்தனயடுத்து, அந்த ஆபாச படத்தை எடுத்து வைத்துக் கொண்டு சிறுமியை மிரட்டி மிரட்டியே 3 மாத காலம் அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தோம்" என்றார். மகளின் தோழியை இப்படி சீரழித்த தந்தையை விசாரணை நடத்தி கொண்டிருந்த போலீஸ்காரர்களே கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

இதையடுத்து போக்சா சட்டத்தின் கீழ் தோழிகளின் தந்தைகளான ரகமதுல்லா, மன்சூர் அலிகான் ஆகியோரை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?