
திருவாரூர் அருகே கடந்த 25 ஆம் தேதி திருமணம் ஆன மனைவியை மது அருந்திவிட்டு தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருத்துறைப் பூண்டியை அடுத்த தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் செட்டிமூலையைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகள் குமாரிக்கும் கடந்த மாதம் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கடந்த 15 நாட்களாக மாப்பிள்ளை – பெண் இருவரும் மாமனார் மற்றும் உறவினர் வீடுகளில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜாலியாக பொழுதைக்கழித்தனர்.
இந்நிலையில் விருந்து முடிந்து கடந்த திங்கட்கிழமை ராஜகவும், குமாரியும் தங்கள் ஊருக்குத் திரும்பினர். அன்று இரவு ராஜா தனது மனைவி குமாரியிடம் இருந்த நகைகளை வாங்கிச் சென்று அதை அடகு வைத்துள்ளார்.
இதையடுத்து ராஜா நன்கு மது அருந்திவிட்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு ராஜாவின் நண்பர்கள் இருவர் மது அருந்திவிட்டு காத்திருந்தனர். அப்போது ராஜா தனது மனைவியை அந்த நண்பர்களிடம் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
அந்த நண்பர்கள் இருவரும் குமாரியை மாறி,மாறி கற்பழித்துள்ளனர். இதையடுத்து அழுது கொண்டே வீடு திரும்பிய மனைவியை ராஜா இங்கு ஏன் வந்தாய் என கேட்டு அடித்துள்ளார்.
தனது கொடூர கணவனின் குணத்தை அறிந்து கொண்ட குமாரி உடனடியாக தனத பெற்றோரிடம் திரும்பினார். பின்னர் இது குறித்து முத்துப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் குமாரி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.