கவனத்திற்கு.. குரூப் 2 தேர்வு விடைக்குறிப்பு..எப்போது வெளியீடு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

Published : May 22, 2022, 05:07 PM IST
கவனத்திற்கு.. குரூப் 2 தேர்வு விடைக்குறிப்பு..எப்போது வெளியீடு.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

சுருக்கம்

நேற்று நடந்து முடிந்த குரூப்2, 2ஏ தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது என்றும் தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5,529 பதவிகளுக்கு தமிழகம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாள் மதிப்பீடு மே – ஜூன் மாதங்களில் நடைபெற்று, தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி.. ஒப்பந்த பெண் பணியாளர்களுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு.. அமைச்சர் அறிவிப்பு..

இதற்கிடையில் குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான விடைக்குறிப்பு இன்னும் 5 நாட்களில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும் என்றும் குரூப் 2 தேர்வில் எந்த தவறான கேள்விகளும் வரவில்லை என்றும்  தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் கணித பகுதி எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும் பல தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் தமிழ் மொழிப்பாட வினாக்கள் பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும், சில வினாக்கள் மிகவும் நுணுக்கமாக கேட்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ விடைத்தாள் குறிப்பு வந்தவுடன் தான், தேர்வு எளிமையானதா? அல்லது கடினமானதா? என கூற முடியும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.9 குறைக்க வேண்டும்.. விடியா அரசு இதையாவது செய்யுமா..? ஈபிஎஸ் தாக்கு..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Govt Grocery Sale: ரூ.60-க்கு பொன்னி அரிசி.. ரூ.130-க்கு துவரம் பருப்பு?! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.. எங்கே வாங்கலாம்?
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து சென்னையில் அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம் !