கணவர், மகன் கண்முன்னே 2–வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை...

Asianet News Tamil  
Published : Feb 22, 2018, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
கணவர், மகன் கண்முன்னே 2–வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை...

சுருக்கம்

women committed suicide in front of husband and son

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கணவர், மகன் கண் முன்னே தனியார் மருத்துவமனையின் 2–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பந்தளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜய்குமார். விவசாயி. அவருடைய மனைவி ஸ்ரீகலா (35). இவர்களுக்கு மாதவன் என்ற மகன் உள்ளார்.

ஸ்ரீகலாவின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதில் இருந்து ஸ்ரீகலா மனமுடைந்து காணப்பட்டும், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டும் இருந்தாராம்.

இதற்கிடையே மகன் மாதவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அஜய்குமார் தனது மகனை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களுடன் ஸ்ரீகலாவும் உடன் சென்றுள்ளார்.

பின்னர் மருத்துவரை பார்த்துவிட்டு அஜய்குமார் மனைவி, மகனுடன் வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென ஸ்ரீகலா மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார். பின்னர் 2–வது மாடிக்கு சென்ற அவர், மாடியில் இருந்து குதித்துவிட்டார்.

கணவர், மகன் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பந்தளம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில் "மனநிலை பாதிப்பு இருந்ததால் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது" தெரியவந்தது.

 

PREV
click me!

Recommended Stories

ஒரு வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்கள் மட்டுமே.. மொபைல் போன்கள் அனுமதி இல்லை
வெயிலுக்கு குட்பை.. ஒரு வாரம் வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட் இதோ!