வாய்பேச முடியாத பெண்ணின் கழுத்தை அறுத்த பெண் கைது; விசாரணை தொடர்கிறது...

Asianet News Tamil  
Published : Nov 21, 2017, 08:31 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
வாய்பேச முடியாத பெண்ணின் கழுத்தை அறுத்த பெண் கைது; விசாரணை தொடர்கிறது...

சுருக்கம்

Woman arrested for cut woman neck

தேனி

தேனியில் ஈவு இரக்கமின்றி வாய்பேச முடியாத பெண்ணின் கழுத்தை அறுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள முத்துசங்கிலிபட்டியைச் சேர்ந்தவர் தவமணி (23). இவர் வாய் பேச முடியாதவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அதேப் பகுதியைச் சேர்ந்த கதிர்வள்ளி (45) என்பவரது தோட்டத்தில் அனுமதியின்றி புல் அறுத்துள்ளார் தவமணி. அதனைப் பார்த்து கதிர்வள்ளி தட்டி கேட்டுள்ளார்.

அதன்பின்பும், தவமணி புல்லை அறுத்ததால், ஆத்திரம் அடைந்த கதிர்வள்ளி, தவமணியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதனால், பலத்த காயமுற்ற தவமணி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ராஜதானி காவலாளர்கள் வழக்குப் பதிந்து கதிர்வள்ளியைக் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி