ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாக்கு சேகரிக்கும் சுயேட்சைகள்…

 
Published : Nov 09, 2016, 02:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாக்கு சேகரிக்கும் சுயேட்சைகள்…

சுருக்கம்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனியாக வாக்குச் சேகரித்து வருகின்றனர் சுயேச்சை வேட்பாளர்கள்.

திருப்பரங்குன்றம் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் பிரச்சாரத்தின்போது மேள தாளங்கள், வாணவேடிக்கை, ஆரத்தி என ஓட்டுக்கேட்க செல்லும்போது அந்தப் பகுதியே திருவிழா கோலமாகவும், மக்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலும் காட்சியளிக்கும். 

அதே சமயம் இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 20 பேர் போட்டியிடுகின்றனர்.

தங்கள் சின்னங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை கார், இரு சக்கர வாகனங்களில் ஏந்திச் சென்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர் இந்த சுயேட்சை வேட்பாளர்கள். 

காரை தானே ஓட்டிக்கொண்டு, ஒலிப்பெருக்கியி பேசியபடியே வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார் ஒருவர்.

ஆர்பாட்டம் இல்லாமல், மக்களை கவர ஆடம்பரம் காட்டாமல் தங்கள் இயன்ற எளிமையான முறையில் வாக்குசேகரிக்கும் இவர்களை பொதுமக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!