தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த கோரி மக்களுடன், மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

 
Published : May 26, 2017, 09:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த கோரி மக்களுடன், மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்…

சுருக்கம்

With the people demanding to implement National Rural Employment Guarantee Scheme the CPI M

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில், இடைக்கழிநாடு பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டி மக்களுடன், மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஏராளாமனா மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

“இடைக்கழிநாடு பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. பின்னர், பேரூராட்சி அலுவலர் பிரேமலதாவிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

இந்தப் போராட்டத்தில், கட்சி நிர்வாகிகள் எஸ்.ரவி, எம்.வெள்ளிக்கண்ணன், ஜி.புருஷோத்தம்மன், என்.மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

PREV
click me!

Recommended Stories

டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!
மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்