
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது.
ரஜினி நடிப்பில், ரஞ்சித் இயக்கியிருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க அறிவிப்பை வெளியிட்டனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பதை படக்குழு உறுதிசெய்துள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல்முறையாக இணையவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதி இந்த படத்தில் ரஜினியின் தம்பி அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், படத்தின் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.