ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உரிய சட்ட திருத்தம் வேண்டும்…

 
Published : Nov 18, 2016, 10:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உரிய சட்ட திருத்தம் வேண்டும்…

சுருக்கம்

மன்னார்குடி,

ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உரிய சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்த வேண்டும்.

மத்திய அரசு பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து போட்டியை நடத்த முன்வர வேண்டும்.

இதுகுறித்து இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
சீமானின் பேச்சை ரசித்து கேட்ட தொண்டரை கழுத்தை பிடித்து தள்ளிய நிர்வாகிகள்.. நாதக நிகழ்ச்சியில் பரபரப்பு..