7 வருட காதலன் கழத்தை அறுக்க காரணம் என்ன? கதறலோடு லாவண்யா கொடுத்த திடுக்கிடும் தகவல்...!

 
Published : May 02, 2018, 07:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
7 வருட காதலன் கழத்தை அறுக்க காரணம் என்ன? கதறலோடு லாவண்யா கொடுத்த திடுக்கிடும் தகவல்...!

சுருக்கம்

why naveenkumar try to murder attempt lawvanya talk

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் பல்கலைக்கழக மாணவி லாவண்யாவை அவரது காதலன் நவீன் குமார் என்பவரே கழுத்தை அறுத்து, கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. 

நவீன் குமார், கல்லூரி முன்பே லாவண்யா கழுத்தை அறுத்ததால், பொதுமக்கள் நவீன் குமாரை அடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்ததோடு, லாவண்யாவை மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தற்போது சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யா நலமடைந்ததைத் தொடர்ந்து, போலீசாரின் விசாரணைக்கு பதில் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... 'கடந்த 7 வருடமாக தானும் நவீன் குமாரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், புராஜெக்ட் சம்பந்தமாக ஏப்ரல் 10 ஆம் தேதி, தன்னுடைய தோழிகள் ஏழு பேருடன் சென்னைக்கு சென்றதாகவும் கூறினார். பின் வேலை முடிந்ததும் நவீன் குமாருடன் மெரினா கடற்கரைக்கு சென்றேன்... அப்போது, தனக்கு ஒரு நண்பரிடம் இருந்து போன் வர, தான் அதை எடுத்து பேசிவிட்டு, பிறகு பேசுவதாக கூறி 30 வினாடிகளில் கட் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் தான் போனை வைத்ததும் போனில் யாரு, என கேட்டு நவீன் சந்தேகப்படும் விதத்தில் பேசினார். ஏழு வருடம் காதலித்தும் இப்படி ஒரு சந்தேக வார்த்தையா...? என்பதை ஜீரணிக்க முடியாமல் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டதாகவும் லாவண்யா கூறினார். 

பின் தோழிகளுடன் சிதம்பரம் வந்ததாகவும், தேர்வு நெருங்குவதால் படிப்பு வேளையில் பிஸியாக இருந்ததாகவும், அதனால் நவீன் பல முறை தனக்கு போன் செய்தும் அதனை தன்னால் எடுக்க முடியவில்லை. 

கடைசியாக இவர் கல்லூரி முன்பே வந்தார். அவர் சந்தேகப்பட்டதால் சிறு கோவத்தில் இருந்தேன்... அதற்காக நவீன் இப்படி செய்வார் என கொஞ்சம் கூட நினைத்து பார்கவில்லை எனக் கூறி அழுது கதறியுள்ளார். 

ஏழு வருடம் காதலித்தும், காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், காதலன் கொலை முயற்சி வரை சென்றும், தானும் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?
‘எமது கொள்கை தலைவர்’ பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்