நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யதது ஏன் - சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜர்...

 
Published : Mar 24, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யதது ஏன் - சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜர்...

சுருக்கம்

Why Do not filed a report on the pending cases - Madras High Court to appear in person at the Police Commissioner George

மத்திய குற்றபிரிவு நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத வழக்கில் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

மத்திய குற்றப்பிரிவுகளில் 2011 வரை முடக்கபடாமலும், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடாமலும் கிடப்பில் போடப்பட்ட நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றபிரிவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும், மற்ற நிலுவை வழக்குகள் குறித்து உயர்நீதி மன்ற பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் இதுவரை காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை.

எனவே காவல் ஆணையர் ஜார்ஜ் கடந்த 20 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருதது. ஆனால், அன்றைய தினம் ஜார்ஜ் ஆஜராகாத காரணத்தால் வரும் 27ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனால் முன்னதாகவே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக காவல் ஆணையர் ஜார்ஜ் விருப்பம் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன் ஜார்ஜை இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜரானார். அப்போது குற்ற வழக்குகள், நில அபகரிப்பு தொடர்பாக அறிக்கைகளை தாக்கல் செய்ய காவல் ஆணையர் ஜார்ஜுக்கு 6 மாத கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்த விசாரணையில் ஆஜராவதிலிருந்து ஜார்ஜுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!