சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் நீதிமன்றம் சென்றபோது மயக்கம்; நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு...

 
Published : Nov 11, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் நீதிமன்றம் சென்றபோது மயக்கம்; நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு...

சுருக்கம்

When faced with the jailing of a social activist The bail plea of the bailiff

நீலகிரி

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் பிரபாகரன் வேறொரு வழக்குத் தொடர்பாக சூலூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயக்கமடைந்தார். அவருடன் சேர்ந்து மற்ற இருவருக்கும் நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.

கோவை மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், வேலுசாமி, மனோகரன் ஆகியோர் நவம்பர் 6-ஆம் தேதி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். அவர்கள் மூவரையும் கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அங்கிருந்து அவர்கள் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டதிலும் ஈடுபட்டனர். இதில், வேலுசாமி உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மனோகரனிடம் சிறைத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை உணவு சாப்பிட வைத்தனர். பிரபாகரன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில் காவலாளர்கள் மற்றொரு வழக்குத் தொடர்பாக பிரபாகரனை சூலூர் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சூலூர் நீதிபதி வேடியப்பன் நேரடியாக சூலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரபாகரன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, "பிரபாகரன், வேலுசாமி, மனோகரன் ஆகிய மூவரும் மூன்று வாரங்களுக்கு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்" என்ற நிபந்தனையின்பேரில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு அளித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு