
நீலகிரி
நீலகிரியில் வனப் பகுதியிலிருந்து யானைத் தந்தம் கடத்திய மூவரை வனத் துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக் கோட்டம், தேவாலா வனச் சரகத்தில் உள்ள குந்தம்புழா வனப் பகுதியிலிருந்து யானைத் தந்தம் கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
அந்த தகவலின்படி தேவாலா வனச் சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனத் துறையினர் யானைத் தங்கம் கடத்துவது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் நாடுகாணி பகுதியைச் சேர்ந்த மனோ (38), தர்மலிங்கம் (32), மழவன் சேரம்பாடி பகுதியைச் சேர்ந்த மணி (48) ஆகியோரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள்தான் யானைத் தந்தம் கடத்தினர் என்பது உறுதிச் செய்யப்பட்டது.
இதனையடுத்து, வழக்குப் பதிந்து மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், பந்தலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை காவலாளர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.