அவள் நீதிமன்றம் வந்து சாட்சி சொல்வாளா? இனி என்னவாகும் நிர்மலா தேவியின் கேஸ்?

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
அவள் நீதிமன்றம் வந்து சாட்சி சொல்வாளா? இனி என்னவாகும் நிர்மலா தேவியின் கேஸ்?

சுருக்கம்

What is the next of Nirmala Devis case

கல்லூரி மாணவிகளை பெரிய மனிதர்களின் கட்டிலுக்கு விருந்தாக்க அழைத்ததாக கைதான பேராசிரியை நிர்மலா தேவியை “சிபிசிஐடி” போலீசார் நேற்று முன்தினம் முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் நடத்திய இந்த கிடுக்குப் பிடி விசாரணை இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்ததாம். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

முதலில் உயர் அதிகாரிகள் மூலம் மாணவிகளுக்கு 'ஆப்பர்டுனிட்டி' கிடைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த முயற்சித்தார் என ஆடியோ வெளியானது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நெருக்கடி கொடுத்த நிலையில் நிர்மலாதேவியை அதிரடியாக சுற்றி வளைத்தனர். அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிர்மலா தேவியின் கேஸ் என்னவாகும்?

இதுகுறித்து தற்போது வலைதளங்களில் தங்கலாது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி நம் கண்ணில் சிக்கிய பதிவு இதோ... ‘ஏதோ நான் தப்பு செஞ்ச மாதிரி எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. நான் அடிமட்டத்துல இருக்கும் ஒரு சாதாரண பெண் தான். அவங்க செய்யச் சொன்னதை செய்யும் ஒரு ஊழியர். பவர் புல் பொசிஷனில் இருப்பவர்கள் இப்படி சொல்லும் போது எப்படி செய்யாமல் இருக்க முடியும்? பெண்கள் என்னை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என நினைத்து சிக்கிக் கொண்டார்.  பத்து வருட கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது என சொல்லி இருக்கிறார் நிர்மலா தேவி. அந்த கதை என்னவென்றால், சுடிதாரும் சேலையும் குடுத்து நிம்மியின் கல்லூரியில் படித்த எந்த பெண்களை யாருடன் கூட்டி விட்டார் என்பதே.

இது உண்மை என்று வைத்துக் கொள்வோம்.

பத்து வருடங்களுக்கு முன் படுக்கையை பகிர்ந்த மாணவிக்கு இப்பொழுது திருமணமாகி ஆறு வயதில் குழந்தை இருக்கும். அந்த பெண்ணை சாட்சியாய் அழைத்தால், அவள் நீதிமன்றம் வந்து சாட்சி சொல்வாளா? ஆமாம்! நிம்மி மாமி சொல்வதெல்லாம் உண்மை என சொன்னால் அவளின் கணவனால், குடும்பத்தாரால் துரத்தப்பட்டு நடுவீதிக்கு வர நேரும் என்பது அவளுக்கு தெரியாதா?

எனவே, சத்தியமாக அப்படி ஒரு சம்பவம் நடைபெறவேயில்லை! நிம்மி சொல்வதெல்லாம் பொய் என்பாள் அவளும், அவள் சார்ந்த பெண்களும்.

சாட்சிகள் இல்லாத குற்றம் நீதிமன்றத்தில் ருசுவாவதில்லை. ருசுவாகாத குற்றம் தண்டனை பெறுவதில்லை.

பிறகென்ன ... விடுதலை தான்! பனை உயரத்திற்கு பொங்கி ஆக்ரோஷமாய் கரையில் மோதி கரைந்து மீண்டும் கடலுக்குள்ளே செல்லும் அலை போலே அசுர வேகத்தில் எழுந்து, ஆமை வேகத்தில் நடந்து ஊமை போல் முடங்கி விடுதலை பெறப் போகும் நிர்மலா தேவிக்கும், அவருடைய இந்த வழக்கிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு?

ஒருமுறை ஒரு நடிகை விபச்சார வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினாள். குற்றத்தை ஒப்புக் கொண்டதால் உங்கள் இமேஜ் பாதிக்காதா? தொழில் சரியாதா? என நிருபர்கள் கேட்ட போது நடிகை சொன்னாள்,

"இந்த வழக்கில் நான் அபராதம் செலுத்தியதன் மூலம் நான் விபச்சாரம் செய்கிறேன் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. என்னை அழைக்கலாமா? வேண்டாமா? என தயங்கி நின்றவர்கள் இப்போது கிடைத்துள்ள இலவச விளம்பரத்தால் இனி தைரியமாக அழைப்பார்கள். இது தான் எனக்கு தொழில். நடிப்பு வெறும் பொழுதுபோக்கு. இனி என் தொழில் வளரும். வருமானம் பெருகும்!" என்றாள்.

அதே கதை தான் நிம்மிக்கும். கலவி என்பது நிம்மியின் தொழில். கல்வி என்பது அவளின் பொழுதுபோக்கு. ஆளாளுக்கு புகையை ஊதி அவளின் தொழிலை பழுக்க வைத்திருக்கிறோம். இருந்தாலும் இந்த விஷயத்தை விடாமல் நாம் பொங்கி கொண்டே இருப்போம். அடுத்த மேட்டர் கிடைக்கும் வரை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 03 January 2026: திமுக தேர்தல் அறிக்கை செயலியை இன்று அறிமுகம்
ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா இருங்க.! தேதி குறித்த தமிழக அரசு.! மிஸ் பண்ணிடாதீங்க!