3 வது குழந்தை எனக்கு பிறக்கல... என்னோட முக ஜாடை இல்ல! இரண்டு காலைபிடித்து குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்

Asianet News Tamil  
Published : Apr 21, 2018, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
3 வது குழந்தை எனக்கு பிறக்கல... என்னோட முக ஜாடை இல்ல! இரண்டு காலைபிடித்து குழந்தையை அடித்தே கொன்ற கொடூரம்

சுருக்கம்

baby killing father

குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு பிறந்து 3 மாதமே ஆன குழந்தையை தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி என்கிற கண்மணிராஜா இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ஜமுனாராணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

இவர்களுக்கு ஹகின் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான ஜமுனாராணிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம் போல இருவருக்கும் சண்ட வந்துள்ளது அப்போது ஜமுனாராணி கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தையை கண்மணிராஜா திடீரென வாங்கி தரையில் ஓங்கி அடித்ததில் அந்த குழந்தை பரிதாபமாக பலியானது. பின்னர் அங்குள்ள குளத்தின் கரையோரத்தில் உள்ள வாழைமரத்தின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அந்த குழந்தையை கண்மணிராஜா புதைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜமுனாராணி போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து கண்மணிராஜாவை போலீசார் கைது செய்த போலீசார் குழந்தையின் உடல் தோண்டி எடுத்தனர்.இதனையடுத்து அந்த குழந்தையை கொன்றது ஏன்? கண்மணி ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். எனக்கும், ஜமுனாராணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையில் 3-வதாக கர்ப்பமான எனது மனைவிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் ஜமுனா ராணியிடம் கூறினேன்.

ஆனால் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு கொண்டு வந்தார் இதனால் எனக்கு கோபம் அதிகரித்தது. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் கோபம் வந்ததால், குழந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதன்படி 19-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த நான் எனக்கு சாப்பாடு வேண்டும் எனக் கேட்டேன் அதற்கு என் மனைவி, குழந்தையை வைத்திருப்பதாகவும், நீயே போட்டு சாப்பிடு என்றும் கூறினார்.

இதனால் எனக்கு கோபமான நான் ஜமுனாராணியை அடித்தேன், அந்த சமயத்தில் குழந்தை அழுததால், உடனே குழந்தையின் 2 கால்களையும் பிடித்து தூக்கி, தலைகீழாக தரையில் ஓங்கி அடித்தேன். அப்போது அந்த குழந்தை இறந்து விட்டது. இதை பார்த்து எனது மனைவி கதறி அழுதார். உடனே நான் அவரிடம் கூச்சலிட்டால் உன்னையும், மற்ற 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் என மிரட்டினேன். இதனையடுத்து வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பள்ளம் தோண்டி அந்த குழந்தையை புதைத்தேன் இவ்வாறு கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இன்று ரவுண்ட் கட்டி அடிக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் குளு குளு அப்டேட்!
திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!