ரெட் அலர்ட் என்றால் என்ன? எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

By vinoth kumarFirst Published Oct 4, 2018, 1:13 PM IST
Highlights

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ரெட் அலர்ட் என்றால், குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்வதாகும்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ரெட் அலர்ட் என்றால், குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்வதாகும். மேக வெடிப்பு என்று கூறப்படும் இது, சில நிமிடங்களிலேயே 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும். அவ்வாறு பெய்யும் போது, மிகுந்த பொருட் சேதமும் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில்தான் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி அன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

* 7-ஆம் தேதி முதல் 25 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும்.

* வானிலை மிகவும் மோசமாக இருக்கும். 

* ஆபத்தான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தல்.

* பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ளுதல்.

* போக்குவரத்து பாதிப்பு, மின்சார இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

* கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்

* மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை விடுத்தல்.

click me!