வங்கியில் கொள்ளை - வாடிக்கையாளர்களின் பணம் என்ன ஆனது - வங்கி மேளாலர் விளக்கம்...!

First Published Mar 26, 2018, 3:05 PM IST
Highlights
what happened to the customers money


விருகம்பாக்கத்தில் உள்ள ஐஓபி வங்கியில் வாடிக்கையாளர்களின் பணம், நகைகள் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி மேலாளர் சரோஜா கூறியுள்ளார். லாக்கர் எண்.259, 654 ஆகியவை மட்டுமே உடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு திறக்கும் வங்கி மாலை 6 மணிக்கு மூடப்படும். இதற்கு காவலாக வேறு மாநிலத்தை சேர்ந்த காவலாளி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று மாலை வழக்கம்போல் வங்கி பூட்டப்பட்டு விட்டது. இன்று காலை வங்கி அதிகாரிகள் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது வங்கியின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் 2 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் வங்கி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவையும் சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த வங்கியில் வேலை பார்க்கும் ஹவுஸ் கீபிங் வேலையாட்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என வலுத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஹவுஸ் கீபிங் வேலையாட்களின் அறை அருகே தான் கேஷ் லாக்கா் வைக்கப்பட்டிருக்கும் அறைகளும் உள்ளன. அதில் ஒருவா் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் வங்கி மேலாளர் சரோஜா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அப்போது, வாடிக்கையாளர்களின் பணம், நகைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் லாக்கர் எண்.259, 654 ஆகியவை மட்டுமே உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

click me!