ராட்சத கிணறு விவகாரம் - ஒபிஎஸ்க்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்...

Asianet News Tamil  
Published : Aug 08, 2017, 06:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
ராட்சத கிணறு விவகாரம் - ஒபிஎஸ்க்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்...

சுருக்கம்

well problem public protest to ops

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் நிலத்தில் உள்ள ராட்சத கிணறை உறுதியளித்தபடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி பெயரில் ராட்சத கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில் இருந்து அதிக அளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயமும் பாதிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமிபுரம் மக்கள், அந்த கிணற்றை ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில்  ஓபிஎஸ் அந்த கிணற்றை லட்சுமிபுரம் மக்களுக்கு இலவசமாக தருவதாக முன்வந்தார்.
இதனிடையே சர்ச்சைக்குரிய கிணறு ஒபிஎஸ்சின் நண்பர் சுப்புராஜ் என்பருக்கு விற்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி கிணறு, போர்வெல், 12 சென்ட் நிலம் போன்றவற்றை தானமாக தருவதாக ஓபிஎஸ் உறுதியளித்தார்.

ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்காத பன்னீர்செல்வத்தை கண்டித்து ராட்சத கிணறை உறுதியளித்தபடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  
 

PREV
click me!

Recommended Stories

திருத்தணியில் ரத்த வெள்ளத்தில் கதறிய வடமாநில இளைஞர்.. விடாத புள்ளிங்கோ.. தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
துணைவேந்தரை நியமனம்.. 3 ஆண்டுகள் டேபிளில் வைத்திருந்த மசோதாவை திருப்பி அனுப்பிய குடியரசு தலைவர்