மகிழ்ச்சி செய்தி.. ! வெயிலுக்கு இதமாக இந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்..

Published : Apr 21, 2022, 02:00 PM IST
மகிழ்ச்சி செய்தி.. ! வெயிலுக்கு இதமாக இந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனம்‌ காரணமாக,

21.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.04.2022: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

23.04.2022: தென்தமிழகம்‌, சேலம்‌, நாமக்கல்‌, கோயம்புத்தூர்‌, இருப்பூர்‌, தர்மபுரி மாவட்டங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதகு மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான /மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.04.2022: மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிஒிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌):
பெருஞ்சாணி (கன்னியாகுமரி), புத்தன்‌ அணை (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பொழிந்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!