தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்...

First Published May 24, 2017, 2:27 PM IST
Highlights
Weather department announced that there will rain on chennai and pondichery


வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் பெரும்பாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.

மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டும் மாணவ மாணவிகள் அதை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் பரவலாக மழைககு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் - 43.5 டிகிரி செல்சியஸ் , வேலூர் - 40.6 டிகிரி செல்சியஸ் , பாளையங்கோட்டை - 39 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

click me!