
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலை மீது சாணி அடித்த பின்பு, அதனை நாங்களே கழுவி விடுகிறோம், தயவு செய்து அதனை பெரிது படுத்த வேண்டாம் என்று சிங்காரப்பேட்டை காவல்துறையினர் கெஞ்சினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் (VAO) எதிரே அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது.
இந்த அம்பேதகர் சிலையின் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளனர்.
மறுநாள் காலை சிலையைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அம்பேத்கரை படிக்கும் இளைஞர்கள் மற்றும் மக்கள் இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு கூடினர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அம்பேதகர் சிலை மீது சாணி அடித்த மர்ம நபர்களை கண்டுப்பிடித்து தண்டிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதற்கு காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் “சாணியை நாங்களே கழுவி விடுகிறோம், தயவு செய்து பிரச்சனைய பெரிது படுத்த வேண்டாம்” என்று கெஞ்சினர்.
அதற்கு மக்கள் சம்மதித்து, இதுபோன்று மீண்டும் நடந்தால் தோன்றும் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று மக்கள் எச்சரித்தனர்.
அம்பேத்கர் சிலை மீது சாணி அடிப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.