வரப்போகிறது "சுட்டெரிக்கும் வெயில்"...! வானிலை ஆய்வறிக்கையில் பகீர் தகவல் ....

First Published Mar 1, 2017, 6:05 PM IST
Highlights
we expects this year too hot in may said sources


வரப்போகிறதாம் சுட்டெரிக்கும் வெயில்

ஒவ்வொரு  வருடமும்,  வெயிலின்  தாக்கம்  தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. குறிப்பாக சென்னை , வேலூர்  உள்ளிட்ட பல  இடங்களில்  வெயிலின் தாக்கம்  உச்சக்கட்டத்தை அடையும் .இந்நிலையில்,  கோடைக் காலம்  நெருங்க உள்ளதால்  இந்த ஆண்டு  வழக்கத்தை விட  வெயிலின் தாக்கம்  அதிகம் இருக்கும் என  சென்னை  வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது .

இதற்கிடையில்,  சென்னையை பொறுத்தவரையில் இன்னும் 4௦ நாட்களுக்கு தேவையான குடிநீர்  மட்டுமே  கிடைக்கும்   என  ஆய்வு ஒன்று தெரிவித்தது. இதனால்,  இந்த ஆண்டு,  சென்ற ஆண்டை  விட  குடிநீருக்கே   பஞ்சம்  அதிகரிக்கும்  என்ற அதிர்ச்சி தகவல்  வெளியாகி  உள்ள நிலையில், தற்போது  வெயில் தாக்கம்  குறித்த  செய்தி   மக்களை  பெரும்  பீதி  அடைய  செய்துள்ளது. 

இதனிடையே , வரும்  நாட்களில்  வெயிலின்  தாக்கம்  அதிகரித்து காணப்படும் என  சென்னை  வானிலை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. தவிர,  வெப்ப  சலனம்  காரணமாக  லேசான மழை பெய்ய வாய்ப்பு  இருக்கும் எனவும்  வானிலை  மையம் தெரிவித்துள்ளது .  

 

click me!