
இன்று மாலை முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால்,பல்வேறு நிகழ்வுகளை பற்றி வைரலாக பரவி வருகிறது.
சூரியன் அல்லது சந்திரன் மீது படும் நிழல் கிரகணம் என கூறுகிறோம்.ஜோதிடத்தில் நிழல் கிரஹங்களான ராகு மற்றும் கேது, சந்திரன் மற்றும் சூரியனோடு இணைவது கூட கிரகணம் என கூறப்படுகிறது
அமாவாசை அன்று சூர்ய கிரகணம் என்றால்,சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
பொதுவாகவே கிரகணம் பற்றி நூல்கள் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.
பொதுவாக கிரஹணங்கள் மூலமாக எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன
அதுமட்டும் இல்லாமல் இயற்கை பேரிடர்கள்,பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என ப்ரஹத் சம்ஹிதை மற்றும் முண்டேன் அஸ்ட்ராலஜி நூல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அரசியல் மாற்றம்
இதே போன்று திடீர் அரசியல் மாற்றம் கூட ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக மொத்தத்தில் கிரகணம் முடிந்த பிறகு வரும் நாட்களில் சில மாற்றங்கள் இயற்கையாகவே ஏற்படுமாம்.