சட்டத்தை உருவாக்கியவர்கள் நாம்; பயன்படுத்திக்கொள்ளுங்கள் - நடிகர் கமல் டுவிட்

First Published Sep 9, 2017, 11:10 AM IST
Highlights
We are the creators of the law - Kamal


சட்டத்தை உருவாக்கியது நாம் தான் என்றும், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பொதுமக்கள், அமைப்புகள் என அனைவரும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக் கூடாது என்று முதலில் செய்திகள் வெளியானது. பின்னர், சட்ட ஒழுங்கிற்கு பாதிப்பில்லாமல் அமைதியான முறையில் போராடலாம் என்று செய்திகள் வெளியானது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">We made justice system.Use it  correct it.We can.Do not insult &amp; abuse it.Our constitution, is robust enough 2 take all debates.Bring it on</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/906187120150061056">September 8, 2017</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

 

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் சட்டம் குறித்து பதிவு செய்துள்ளர். அதில், இந்த சட்டத்தை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக் கொள்ளுங்கள், ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாக பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டு வர முடியும். வாருங்கள் விவாதிக்கலாம். 

என்று அதில் பதிவிட்டுள்ளார்.
 

click me!