வறண்டது வீராணம் ஏரி... சென்னையில் குடிநீர் பஞ்சம் - அச்சத்தில் பொதுமக்கள்

First Published Feb 20, 2017, 11:42 AM IST
Highlights


வீராணம், கண்டலேறு வறண்டதால் சென்னையில் குடிநீர் பஞ்சம்…பொதுமக்கள் அச்சம்…

வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதே போன்று கிருஷ்ணா நதிநீரின் அளவும் குறைக்கப்பட்டு விட்டதாவ் சென்னையில் கடும் குடிநீர்த்ட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது கடலுர் மாவட்டம் வீராணம் ஏரி. அங்கிருந்து நாள்தோறும் குடிநீர் எடுத்த வரப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில் வீராணம் ஏரி வறண்டு விட்டதால் சென்னையின்  குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாற்று ஏற்பாடாக என்எல்சி சுரங்க நீர், போர் மூலம் பெறப்பட்டு வீராணம் குழாய் வழியாக  சென்னைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது எந்த அளவுக்கு சாத்தியம் என தெரியவில்லை என பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவைக்காக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆந்திர மாநிலம் சென்று சந்திர பாபு நாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதிநீரை பெற்று தந்தார்.

இதையடுத்து கண்டேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டது.

ஆனால் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீரின் அளவும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திறக்கப்படும் நீரின் அளவு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வறண்ட வீராணம் கண்டலேறு அணை போன்றவை தற்போது கைகொடுக்காததால் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதால் பொது மக்கள்  கவலை அடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த 5 மாதங்களாக தமிழக அரசு செயல்படுகிறதா என மன உளைச்சலில் இருந்த பொது மக்கள் தற்போது மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

click me!